"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


வேண்டாம் வரதட்சணை

26.11.10

புரியாதப் புதிராகவே இருக்கிறது இந்த சொல்...! வரதட்ச்சனை கேட்ட்பவள் பெண்,வரதட்ச்ச்சனையை கொடுப்பவள் பெண்,அதை போராடி வீதிக்கு கொண்டு வருபவள் பெண்,நீதி மன்றத்தில் தீர்ப்பு சொல்லுபவளும் பெண்.

இப்படித் தலைமுறை தலைமுறையாக தொடரும் இந்த தொடருக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாதா ?


கண்டிப்பாக முடியும்,பெண்கள் மனசு வைத்தால் மட்டுமே முடியும்.


நாற்ப்பது வருசத்திற்கு முன்னாடி நீங்கள் மருமகளாக, மாமியார் வீட்டிற்குப் போகும்போது வரதட்ச்ச்சனைக் கொடுமைக்கு, மாமியார், மற்றும் நாத்தனர்களால்
பெரும் துனபத்திர்க்கு ஆளாக்கப் பட்டிர்கள்... சரியா ?


அன்று நீங்கள் மருமகள்கள்...!!! இன்று நீங்கள் மாமியார்கள்...!!!
நீங்கள்தான், இந்த தலைமுறையில் வரக்கூடிய மருமக்கள்மார்களை வரதட்ச்சனைக் கேட்டு தொல்லைப் பண்ணுகிறிர்கள்.


இதே மருமக்கள்மார்தான் இன்னும் இருபது வருஷம் கழித்து வரதட்ச்சனைக் கேட்கப் போகிறார்கள், ஆகமொத்தம் கூட்டி கழிச்சுப் பார்த்தால், பெண்ணிற்கு பெண்ணே எதிரி !!!


கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பதற்காகவே பெண் வீட்டார்கள், பயிரிடப்படும் நிலங்களை விற்று, தம் பொண்ணுகளை கரை சேர்த்துள்ளார்கள்,கணவன் என்றப போர்வையில் கைக்கூலி வாங்கியவன் திருடன்தான்.


திருடன் கத்தியைக் காட்டி திருடுவான்,நீயோ தாலியைக் காட்டி திருடுகிறாய்.
வரதட்ச்சனைக் கொடுமையைப் பற்றி எழுத்தின் மூலமாகவும்,சமூக அமைப்பின் மூலமாகவும்,கவிதைகள் மூலமாகவும்,மற்றும் பல போராட்டங்கள் மூலமாகவும், எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்க்காத இந்த கேடுகட்ட சமூகத்திற்கு, அன்னியனைப் போன்றவர்கள் தண்டனைக் கொடுத்தால், குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கும் என நம்புகிறேன்.


தொட்டதெல்லாம் பொன்னாகிறதே என்று, பெண் வீட்டாரை தொல்லைப் படுத்தும் ஆண் வீட்டாரை எச்சரிக்கிறேன்.


வாங்கியது வாங்கியதாகவே இருக்கட்டும், இனி நீங்கள் வரதட்ச்சனை என்று வாயை எடுத்தால் பழுக்க காய வைத்த கடப்பாறையை எடுத்து உங்கள் வாயில் நுழைப்பதற்கு அந்நியனின் சட்டத்தில் இடம் இருக்கிறது,ஆகையால் அத்தகைய குற்றத்திற்கு ஆளாகாமல், நல்ல வீட்டாராக நடந்து கொள்ளுவதற்கு சத்திய பிராமணம் எடுத்துக் கொள்ளுங்கள்.


இல்லையேல் அந்நியனின் வேட்டை தொடரும், இங்கு தீர்ப்பு மட்டும்தான் வழங்கப்படும்,இந்த தீர்ப்பை படித்து விட்டு இந்தியாவில் உள்ள முப்பது கோடி அந்நியன்களும் உங்கள் இல்லம் தேடி வந்து தண்டனைக் கொடுப்பார்கள்.


வரதட்சனைக் கொடுத்து, கணவன் வீட்டிற்குள் போகும் புதுப் பெண்ணே, உன்னையும் எச்சரிக்கிறேன் உன் மகனுக்கும் வரதட்ச்சனைக் கேட்பதற்கு மனக்கணக்கு போட்டிருந்தால், வாசலில் போடும் கோலமாக நினைத்து அதை அழித்துவிடு, இல்லையேல் அந்நியனின் சட்டத்தின் முன்னே நீயும் குற்றவாளிதான், உனக்கும் அதேக் கம்பிதான் தண்டனை.


அந்நியனின் பரிந்துரை :


1 .ஆடம்பர கல்யாணச் செலவைக் குறைத்து விடுங்கள்.


2 .இரு வீட்டாரும் கல்யாணச் செலவை சேர்ந்தே செய்யுங்கள்.


3 .விருந்தை ஒரே இடத்தில் வைத்து இரு வீட்டாரும் இனைந்து கொள்ளுங்கள்.


4 .தங்கம் அணிவதை பெண்கள் புறக்கணியுங்கள்.


5 .சீர்,சீராட்டத்தை மறந்து விடுங்கள்.


இதையும் மீறி நீங்கள் வரதட்சனைப் பணத்தை வாங்கி, வீடு கட்டிடலாம்னு மனக்கோட்டை கட்டி விடாதிர்கள் அழிந்து நாசமாகப் போவிர்கள்,அந்தப் பணத்தை வாங்கித் திங்கப்போகும் நீங்கள் மனித கழிவை தின்பதற்கு சமம்.


பெண்ணையும் கொடுத்து அதை சேர்த்து பொன்னையும் கொடுத்த மக்களின் சாபத்திற்கு ஆளாகிவிடவேண்டாம்.
நண்பர்களே சிந்தியுங்கள்...! பிறகு செயல்படுங்கள்...!


வரதட்ச்சனை மூலமாக வந்தப் பணம் !!!
அது உமது சகோதரனின் அழுகியப் பிணம் !!!
அதை உண்பதால் திருப்தி அடையும் உன் மனம் !!!
இதை என்றும் எழுதிக் கொண்டிருப்பேன் தினம் !!!

அந்நியன் : 2

1 comments:

mohamed December 2, 2010 at 11:02 PM  

www.babrimasjidnews.blogspot.com

பாபரி மஸ்ஜித் குறித்த அடிப்படை தகவல்கள் வருங்காலத்தில் ஃபாசிஸ்டுகளால் நிச்சயமாகத் திரிக்கப்படும். ஆகவே அவற்றை நினைவு கூருவதும், நாட்டு மக்களுக்கும், உலக மக்களுக்கும் அதைப் பாதுகாத்துத் தருவதும் நமது கடமை.

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP