"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


தரையிறக்கப்பட்ட யுஎஸ் விமானம்

19.10.09


மும்பை: இந்திய வான் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்க விமானம் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டது.நார்த் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த போயிங் விமானம், ஐக்கிய அரபு நாடுகளின் பிஜூரியா நகரில் இருந்து 205 அமெரிக்கக் கமாண்டோக்களுடன் பாங்காக் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானம் இந்திய வான் எல்லைக்குள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தது.
இதையடுத்து அந்த விமானத்தை உடனே மும்பை விமான நிலையத்தில் தரையிறங்குமாறு உத்தரவிடப்பட்டது.இதைத் தொடர்ந்து காலை 7.52 மணிக்கு அந்த விமானம் இறக்கப்பட்டது. அதிலிருந்த பயணிகளை கீழே இறங்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
மத்திய உளவுப் பிரிவினர் அந்த விமானத்தில் ஏறி விசாரணை நடத்தினர். பின்னர் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தலையிட்டதையடுத்து அந்த விமானம் மீண்டும் கிளம்ப அனுமதிக்கப்பட்டது.கடந்த ஜூன் மாதம் முதல் இதுபோல் விதிகளை மீறி இந்தியாவுக்குள் பறந்த 3 வெளிநாட்டு விமானங்கள் கட்டாயமாக தரை இறக்கப்பட்டு விசாரணைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது 4 வது சம்பவம் ஆகும்.
நன்றி,
தட்ஸ்தமிழ்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP