"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


இந்துத்துவாவின் முகவரியும், முகங்களும்

21.10.09

"கயை அழிந்து கிடந்தது. கபிலவஸ்து காடுமண்டிக் கிடந்தது. பாடலிபுத்திரம் செல்வச்செழிப்போடு விளங்கியது" என்கிறார் அப்போது இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் பாஹியான். சாதாரண மக்களின் பாஷையாக இருந்த பிராகிருத மொழிக்கு இல்லாத ஆசியும் அந்தஸ்தும் சமஸ்கிருத மொழிக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் நிறுவனமாக்கப்பட்ட முதல் மதமான புத்தமதத்தை நிராகரித்து, இன்று இந்து மதமாக உருவாக்கப்பட்டுவரும் அன்றைய வேத மதத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது.
சமுத்திர குப்தன் தலைநகரை பாடலிபுத்திரத்திலிருந்து அயோத்திக்கு மாற்றினான். விக்கிரமாத்தியன் கட்டிய ஜெயஸ்தம்பத்தின் உச்சியில் தாமரைப்பூ செதுக்கப்பட்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்தகால மகிமைகளை மீட்டெடுத்த காலமாக அவர்கள் கருதினார்கள். எனவேதான், மிக நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் கி.பி 308ம் ஆண்டிலிருந்து 160 ஆண்டுகளே இருந்த இந்த குப்த சாம்ராஜ்ஜியம்தான் இந்தியாவின் பொற்காலம் என்று உச்சரிக்கப்படுகிறது.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னே பெண்களும் கல்வி கற்க ஏற்பாடு செய்திருந்த சக்கரவர்த்தி அசோகரின் ஆட்சி அவருக்கு மகிமை வாய்ந்ததாக இருக்காது. இந்தியா முழுவதும் பரவியிருந்த புத்தமதத்தை திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்து, சுவீகரித்து தங்களது மதமாக விழுங்கி, வர்ணாசிரம கட்டுமானத்தை இறுக்கிக் கொண்டதுதான் குப்தர்களின் காலம். புத்தமதத்தில் இருந்த ஜனநாயகத்தை கழுவிலேற்றி சர்வாதிகாரத்தை ஸ்தாபித்துக் கொண்டதுதான் குப்தர்களின் காலம். காளிதாசரையும், அஜந்தா சிற்பங்களையும் காட்டி கலைகள் வளர்ந்தன, இலக்கியம் வளர்ந்தன என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.
மன்னர்களின் சரித்திரங்களிடையே சாதாரண மக்களின் வாழ்க்கை தாழிகளில் புதைக்கப்பட்டு இருக்கின்றன. வேதமதத்தின் ஜாதிய கட்டுமானத்திலிருந்து தங்களை விடுதலை செய்து கொள்ளவே தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் புத்தமதத்தைத் தழுவினர்.
பிறகு சமண மதத்தைத் தழுவினர். மூஸ்லீம் மதத்திற்கும், கிறித்துவ மதத்திற்கும் முதலில் சென்ற மனிதர்கள் இவர்களாகவே இருக்கிறார்கள். தங்களை மனிதர்களாக, சம உரிமை கொண்டாடுபவர்களாக யாராவது மதிக்க மாட்டார்களா என்று வரலாற்றின் நாட்கள் முழுவதும் தேடித்தேடி அலைந்தவர்களாக இந்த சாமானியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான ஒளியைத் தராமல் தங்கள் பிடியில் எப்போதும் வைத்துக் கொள்ளவே ஆதிக்க சக்திகள் துடியாய் துடிக்கின்றன. வேதகாலத்திற்குப் பிறகு அது குப்தர்களின் காலத்தில் முன்னுக்கு வந்தது. அப்போது கடந்தகால மகிமை பேசியது. மொகலாயரின் காலத்துக்குப் பிறகு சமயமறுமலர்ச்சிக் காலமாக பேர் சூட்டிக்கொண்டு கடந்தகால மகிமை பற்றி பேசியது.
இந்திய சுதந்திரத்தின் கடைசித் தருணங்களில் இந்துமகா சபையாக, ஆர்.எஸ்.எஸ்ஸாக உருவெடுத்து பாரதீய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள்ளாக பல முகங்களோடு இன்று 'கடந்தகால மகிமை' பற்றி பேசுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரன் எடுத்துக் கொடுத்த 'இந்து' என்கிற வார்த்தையை அப்படியே பிடித்துக் கொண்டு அதையே வரலாற்றின் எல்லா காலக்கட்டங்களிலும் தங்கள் மதத்தின் பேராய் பதித்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் இந்துத்துவாவின் முகவரியும், முகங்களும்.
கடந்தகால மகிமை பற்றி பேசி, நிகழ்காலத்தை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதுதான் இவர்களின் நோக்கம். இந்துத்துவா என்பதன் வரலாற்றுப் பிண்ணனியும், அர்த்தமும் இதுதான். தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் தங்களது சேனைகளாய் உருவாக்கிக் கொள்ள ஒரு பொது எதிரியை காண்பிக்கிறார்கள்.
அது 'இந்து' என்று இவர்கள் காட்டுகிற அடையாளத்தில் அடங்கி இருக்கிறது. 'யார் தங்கள் தந்தையர் பூமியை புண்ணிய பூமியாக கருதுகிறானோ அவனே இந்து, இந்தியன்' என்றெல்லாம் வியாக்கியானங்கள் தருகிறார்கள். ஒரு மூஸ்லீமுக்கு, அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருக்கட்டும், சவுதி அரேபியாவைச் சார்ந்தவராக இருகட்டும். புண்ணிய பூமி என்றால் மெக்காவும் மெதினாவும்தான். இந்த ரீதியில் பார்க்கும்போது கிறித்துவர்களும், மூஸ்லீம்களும் இந்த நாட்டுக்குரியரவராக இருக்க முடியாது.
சொந்த நாட்டுக்குள்ளேயே அவர்களை அந்நியர்களாக்குகிற கபடத்தனம் இது. அவர்களுக்கு எதிரான ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கி இந்த 'இந்து' என்ற ஒரு மாயமான அடையாளத்தை மேலும், மேலும் உறுதிப்படுத்துவதை அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.
அவர்களின் கடந்தகால மகிமை என்பது மக்களின் சந்தோஷத்தைப் பற்றியதாக இருக்காது. அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவது பற்றி இருக்காது. மக்களை எப்படி அடிமைப்படுத்துவது என்பதைப் பற்றியதாகவே இருக்கும். கடந்தகாலத்தில் ராமருக்கு அயோத்தியில் கோவில் இருந்தது, அது பாபரால் இடிக்கப்பட்டது என்பார்கள். கடந்தகாலத்தில் சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக இருந்தது என்பார்கள்.
கடந்தகாலத்தில் இராஜஸ்தான், குஜராத் வழியாக சரஸ்வதி நதி ஓடிக்கொண்டு இருந்தது, அதை மீட்க வேண்டும் என்பார்கள். கடந்தகாலத்தில் இங்கேதான் ராமர் பாலம் இருந்தது. எனவே சேதுசமுத்திரத் திட்டம் வேண்டாம் என்பார்கள்.
வரலாற்றின் பக்கங்களை கரையான்களாய் அரித்துவிட்டு அதில் என்ன எழுதியிருந்தது என்பதை அவர்களே சொல்லுகிற விசித்திரம் இது. முழுவதும் அறிய முடியாத கடந்த காலத்தை தங்களுக்குரியதாக பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகையான வரலாற்று மோசடியை அவர்கள் செய்துகொண்டே இருப்பார்கள்.
இதுதான் பாசிசத்தின் ஆணிவேராகவும், அடிநாதமாகவும் இருக்கிறது. எதிர்காலத்தை நிகழ்காலத்தின் வெளிச்சத்திலிருந்து ஒரு புதிய உலகமாக படைத்திட அவர்கள் நினைப்பதில்லை. எதிர்காலத்தை கடந்தகாலத்தின் இருட்டிலிருந்து கொண்டு வரவே அவர்கள் துடிக்கிறார்கள்.
சமூகத்தின் அழுக்குகளை உதறிவிட அவர்கள் ஒருபோதும் நினைப்பதில்லை. அழுக்குகளை மேலும் மேலும் சமூகத்தின் மீது படியச் செய்வதுதான் அவர்கள் விருப்பம். ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கிற பரிணாமத்தை அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஒன்றே ஒன்றுதான், அதில் மாற்றமில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்.
இவர்கள் தன்னை சவாரி செய்ய காலமென்னும் குதிரை அனுமதிப்பதில்லை. அவர்களை புறந்தள்ளிவிட்டு நகர்ந்துகொண்டே இருக்கும

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP