உசாரய்யா- உசாரு!
25.10.09
சென்ற 17.10.09 தேதி தீபாவளிக்கு முன்பு ஒரே பரபப்பு-என்னவென்று நினைக்கிறீர்கள். தீபாவளி கொண்டாட்டத்தினை சீர் குழைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி என்று பத்திரிக்கைகளிலும்-எலக்ட்ரானிக் மீடியாக்களிலும் செய்தி வெளியானதினை அனைவரும் அறிந்ததே.
அத்தோடு அமெரிக்க உளவு நிறுவனமும் தன் பங்கிற்கு எச்சரிக்கை செய்தது வழக்கம் போல். ஆனால நடந்தது என்ன?
கோவா மாநிலம் பண்டா நகரில் தீபாவளி இரவு அன்று ஸ்கூட்டரில் சென்ற இருவர் குண்டு வெடித்து பின்பு மரணம் அடைந்தனர். கோவா மாநில காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து இறந்தவர்கள் பட்டேல்-நாயக் என்று அடையாளம் கண்டு, அவர்கள் கொண்டு சென்ற பையிலிருந்து தான வெடி குண்டு நேரத்திற்கு முன்பாகவே வெடித்து விட்டதாகவும் சொல்லிவுள்ளதினை அனைவரும் அறிவர்.
அவர்கள் யார் என்ற விசாரணையில் அவர்கள் இந்து தீவிரவாத அமைப்பான சமாதா சான்ஸ்தாவினைச் சார்ந்தவர்கள் என்றும் அறிக்கை கூறுகிறது.
சாமாதா சான்ஸ்தா அமைப்பு எது தெரிகிறதா நண்பர்களே? மகாராஸ்ட்ரா மாநிலத்தில் சில காலங்களுக்கு முன்பு மாலேகான் நகரில் வெள்ளிக்கிழமை ஜூம்மாத் தொழுகை நேரத்தில் சைக்கிள் குண்டு வெடித்து பலர் மாண்ட சம்பவத்தில் கைது செய்யப் பட்ட பெண் சாமியார் பிராகயா சிங்-ராணுவ அதிகாரி புரோகித் போன்றவர்கள் கொண்ட இயக்கமாகும். ஆகவே பயங்கர வாத-நாசவேலைகளை செய்து விட்டு காவல் துறையினரை ஏவி முஸ்லிம்களை கைது செய்யத் தூண்டும் நடவடிக்கைக்காவும்-அதன் மூலம் இந்திய சமூகத்தினரிடையே கலவரம் ஏற்பட வழிவகை செய்யும் நடவடிக்கையாகுமென்றால் மிகையாகுமா?
இன்னொரு சம்பவமும் சமீபத்தில் நடந்துள்ளதினை உங்கள் கவனத்திற்கு வைக்கிறேன். கர்னாடகா மாநிலம் பெங்களுரில் 20 வயதிற்குட்பட்டவர் தேசிய மட்டைப் பந்து போட்டிக்கு 17.10.09ந்தேதிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதற்கு காஷ்மீரிய கிரிக்கட் குழுவினர் வருகை தந்துள்ளனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையில் கர்னாடகா காவல் துறையினர் திடீர் சோதனையிட்டனர். அதில் விளையாட்டு வீரர் ரசூல் உடைய பையில் சோதனைக் கருவியில் சோதனையிட்டபோது எதே சத்தம் வருகிறது என்று அவருடைய பையைத் துருவி-துருவி சோதனையிட்டும் ஒன்றும் கிடைக்காத பட்சத்திலும் அவரையும் அவருடன் தங்கியிருந்த மற்றொரு வீரரையும் கைது செய்துள்ளனர். அதன்பின்பு காஷ்மீர் கிரிக்கட் வாரியத்தலைவர் பாரூக் அப்துல்லா அவர்கள் கண்டனம் தெரிவித்ததுடன் போட்டியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்பு பெங்களுர் போலிஸ் கமிஷனர் சங்கர் பிடாரி அறிவிக்கிறார், “சில தரப்பினரிடம் வந்த தகவலினை வைத்து தவறாக நடவடிக்கை எடுத்து விட்டதாகவும”; கூறுகிறார். கர்நாடக மாநிலத்தில் ஆட்சி செய்வது யார்? புp.ஜே.பி. அரசு. அங்கே தான் ராம் சேனா என்ற தீவிர இந்துக்கள் அமைப்பு உள்ளது என்பதினையும் நீங்கள் அறிவீர்கள்.
ஆஸ்திரேவியாவில் அநியாய பழி சுமத்தி கைது செய்யப் பட்டு நாடு கடத்திய டாக்டர் ஹனீப்பிடம் மன்னிப்புக் கேட்டதோடு மட்டுமல்லாது அவருக்கு உண்டான நஷ்ட ஈடுடன் அவர் திரும்பி ஆஸ்திரேலியா வந்து தொழில் செய்யலாம் என்றும் ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது.
ஆனால் கர்னாடகா காவல் துறையோ காஷ்மீர் வீரர் ரசூல் பையில் சோதணையில் ஒன்றுமில்லை என்று அறிவித்தாலும் அந்த வீரர் ரசாயண பரிசோதணை முடியும் வரையில் அறையை விட்டு வெளியேறக் கூடாது என்று அறிவித்துள்ளார்.
குஜராத்தில் கோத்ரா ரயில் தீப்பிடிக்க காரணம் முஸ்லிம்கள் தான் காரணம் எனச் சொல்லி இனப் படுகொலையில் ஈடு பட்ட பி.ஜே.பி கட்சியில்; முஸ்லிம் எம்.பிக்கள் நக்வி, ஷாநாஸ் ஹ_சைன் போன்றவர்கள்; இன்னும் உள்ளனர். ஆனால் அவ்வாறு உள்ள ஷாநாஸ் ஹ_சைனுக்கு ஐ.நா. சபைக்குச் செல்ல விசா கிடையாது எனச் சொல்லி விட்டது அமெரிக்கா, ஏனென்றால் அவர் முஸ்லிமாக இருப்பதால் தானே! இ.னியாது அவர் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
காசாப் பகுதியில் பெண்கள்-குழைந்தைகள் எனப் பாராது கிட்டத்தட்ட 1300 நபர்களைக் கொன்று இனப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது இஸ்ரேயில் என்று ஐ.நாவிற்கான கமிட்டி குற்றம் சாட்டியதோடு சரி. ஆனால் நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியாது ஏனென்றால் அமெரிக்கா தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன் படுத்தி அதனை தடுத்து விடும். அப்படிப் பட்ட இஸ்ரேயிலின் ஏனென்டுகள் இந்தியாவில் பல துறைகளிலும் தங்கள் ஆதிக்கத்தினை பதித்துள்ளார்கள் என்றால் மிகையாகாது என்பதிற்கு ஒரு சம்பவத்தினைச் சொல்ல ஆசைப் படுகிறேன். சமீபத்தல் சென்னையில் நடந்த சட்டத்திற்கான கருத்தரங்கில் இஸ்லேயில் நாட்டு பேராசிரயர் ஒருவர் சொல்லுகிறார், “இந்தியாவிற்கு சிவில் சட்டம் அவசியம்” என்று. மத்திய அரசோ சிவில் சட்டம் கொண்டு வருவதா வேண்டாமா எனபதினை விவாதிற்குட்டது என்று சொல்லும் போது-அந்தப் பேராசிரியர் பி.ஜே.பியின் ஊது குழழாக இருந்து சொல்கிறார். அது மட்டுமா? புஷ் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தபோது முக்கிய வின்வெளி ஆராய்ச்சி நிபுணராக இருந்த ஸ்டுவார்ட் இஸ்ரேயில் உளவாளியாக இருந்திருக்கறார். அவர் இந்திய வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவிற்கு 2008ஆம் ஆண்டு இரண்டு தடவை வந்து சென்றுள்ளார். அவர் முக்கியமான தகவலை இஸ்ரேல் உளவாளியாக நடித்த அமெரிக்க உளவுத் துறையான எப்.பி.ஐயில் அக்டோபர் 20ந்தேதி தகவல் பரிமாற்றம் டாலருக்காக செய்யும் போது மாட்டியுள்ளார.; அத்துடன் இந்துத்துவாவிலே பி.எப்.ஜி என்ற குழு இருப்பதாகவும், அதில் பெரும்பாலும் இளைஞர்கள் கொண்ட அமைப்பாகவும், அவர்கள் வேலையே முஸ்லிம் பெண்களை கவரக்கூடிய செல்போன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் கற்பிற்கு களங்கத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பித்துக் கொள்வதாகவும் சொல்லப் படுகிறது. ஆகவே இஸ்ரேயில் நாட்டவர் ஆதிக்கமும், இந்துத்துவா தீவிரவாதமும் அதிகமாகி வருவதால் முஸ்லிம்கள் மிகவும் கீழ்கண்ட இடங்களில் உசாராக இருக்க வேண்டும்:
ஜூம்மா தொழுகும் போது கண்காணிப்பில் மக்காவில் காபாவில் பாதுகாப்பான காவலர்கள் இருப்பது போல பாது காப்பில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்.
பெரிய தப்பலீக் ஜமாத்துக்கள் நடக்கும் போது டோர் பிரேம்- ஹேண்ட் மேட மெட்டல் டிடக்கர்கள் பயன்படுத்தி சோதனைக்குப் புpன் அனுமதிக்க வேண்டும்
பள்ளிவாசல்களில் இரவில் அடையாளம் தெரியாதவர்களை தங்க அனுமதிக்கக் கூடாது.
திருமண நிகழ்ச்சிகளில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவேண்டும்.
பெரிய தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் பி.ஜே.பி ஆட்சி செய்யும் மாநிலங்களில் பயணம் செல்லும் போது அந்நியரின் சதிக்கு ஆழாக்கக் கூடாது. இல்லையென்றால் குஜராத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் இஸ்ஸாரத், ஜெஹ்ராப் போன்றவர்கள் தீவிரவாதிகள் என்ற போலியானக் காரணங்களால் கொல்லப்பட்ட நிகழ்வுகள் நடக்க வழிவகுக்கக்கூடாது.
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் எங்காவது நடந்தால் முஸ்லிம் பெண்கள்-வியாபாரத்தலஙகள்-மதரஸாக்கள் ஆகியவைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் முஸ்லிம் இளைஞர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் வேலைபார்ப்பதால்.
முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம். ஆகவேதான் உசாரய்யா-உசாரய்யா என ஆரம்பத்தில் சொன்னேன்.
0 comments:
Post a Comment