சென்னை கூவம் ஆற்றைச் சீர்படுத்த சிங்கப்பூர் நிறுவனம் ஆலோசனை
2.2.10

தமிழகத் துணை முதல்வரும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க. ஸ்டாலின் முயற்சியில் சென்னை கூவம் ஆற்றைச் சீர்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதில் சிங்கப்பூரின் எஸ்இசி எனும் சிங்கப்பூர் கோஆபரேஷன் எண்டர்பிரைஸ் ஆலொசகராகச் செயல்பட்டு கூவம் ஆற்றைச் சீர்படுத்தும் பெருந்திட்டத்தை ஆயத்தப்படுத்தி மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி தெரிவித்தது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் நிறுவன அதிகாரிகளும் தமிழக அதிகாரிகளும் சென்னையில் பிப்ரவரி மாதம் கையெழுத்திடுவர் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதற்காக எஸ்இசி நிறுவனத்தின் அதிகாரிகள் அடுத்த மாதம் சென்னைக்குப் பயணம் மேற்கொள்வர் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது
0 comments:
Post a Comment