ஈரானுக்கு ஏவுகணைகளை வழங்குகிறது ரஷ்யா
22.2.10
ஈரான் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி அந்த நாட்டுக்கு ரஷ்யா எஸ் -300 ரக ஏவுகணைகளை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்த தகவலை ரஷ்ய அயலுறவுத் துறை துணை அமைச்சர் செர்ஜி ரியாபாக்கோவ் தெரிவித்தார்.
இந்த ரக ஏவுகணைகள், ஈரான் வானவெளிக்குள் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளையும், விமானங்களையும் சுட்டு வீழ்த்தும் வல்லமை உடையது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அணு ஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனிய செறிவூட்டலை ஈரான் தொடங்கியுள்ள நிலையில், ரஷ்யாவின் இந்த ஆயுத உதவி அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளை கவலைக் கொள்ளச் செய்துள்ளது.
0 comments:
Post a Comment