"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது மத பாரபட்சம்

4.2.10

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்குவது அவர்களின் மதத்தின் அடிப்படையில் அல்ல என்றும் அது அவர்களின் பிற்ப்பட்ட நிலையை கணக்கில் கொண்டு என்று முன்னாள் எம்.பியும் முஸ்லிம் இந்தியா என்ற பத்திரிகையின் எடிட்டருமான செய்யத் ஷஹாபுத்தீன் கூறினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அளித்துள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தக் கோரி நடத்தும் இடஒதுக்கீடு பிரச்சார இயக்கத்தின் துவக்கமாக மஹராஷ்ட்ரா மாநிலம் புனேவிலிலுள்ள மகாத்மா ஜோதி பூலே நகரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார் அவர்.


மேலும் அவர் உரையாற்றியதாவது,"மதத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு அரசியல் சட்டம் வழங்கும் இடஒதுக்கீட்டு உரிமையை முஸ்லிம்களுக்கு மறுப்பது மதரீதியான பாரபட்சமாகும்.

முஸ்லிம்களுக்கும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கும் அளிக்கும் இடஒதுக்கீடு என்பது எவருடைய அன்பளிப்பும் அல்ல. அது அரசியல் சட்டம் வழங்கும் உரிமையாகும்.

இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்குள் வழங்கவேண்டும் என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மாற்ற அரசு சட்டம் கொண்டுவரவேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களை சக்திப்படுத்துதலின் ஒரு பகுதியாகத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார இயக்கத்தை துவக்கியுள்ளது என இரண்டு மாதம் நீடிக்கும் பிரச்சார நிகழ்ச்சியில் துவக்கமாக பேசிய பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியாவின் தேசியத்தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தெரிவித்தார்.

அவர் தனது உரையில், "ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பூலே மற்றும் அம்பேத்காருடன் நெருங்கிய தொடர்புடைய புனே நகரத்திலிருந்து இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார இயக்கத்தை துவக்கியதற்கு வரலாற்று ரீதியான முக்கியத்துவம் உள்ளது. சச்சார் கமிட்டி முஸ்லிம்களின் பிற்பட்டநிலைக்கான காரணங்களை கண்டறிந்தது. அதற்கான பரிகாரத்தை சிபாரிசுச் செய்துள்ளது மிஷ்ரா கமிஷன். ஆனால் கல்வி-வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கமிஷனின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு இது வரை தயாராகவில்லை.


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும். முஸ்லிம்களின் எவருடைய கருணையையும் எதிர்பார்க்காமால் அவர்கள் சொந்தமாகவே போராட்டத்தை துவக்கவேண்டும். எனக்கூறினார் அவர்.


இந்நாட்டில் அனைத்து சமூக மக்களும் முன்னேறினால்தான் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமாகும் என்று நேசனல் செக்யூலர் ஃபாரம் தேசிய கண்வீனர் சுரேஷ் கைர்னார் கூறினார்.

இப்பொதுக்கூட்டத்தில் மவ்லானா உஸ்மான் பேக் ரஷாதி (தலைவர்,ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்), அப்துல் ஹன்னான்(எஸ்.டி.பி.ஐ பொதுச்செயலாளர், கர்நாடகா), சுபாஷ் வாரே(ஒருங்கிணைப்பாளர், மஹாரஷ்ட்ரா மூன்றாவது முன்னணி), ஹாஃபிஸ் மன்சூர் அலி கான்(தலைவர், முஸ்லிம் ஆரக்‌ஷன் சங்கர்ஷ் சமிதி, ராஜஸ்தான்), மவ்லானா ராஸின் அஷ்ரஃப்(இமாம்ஸ் கவுன்சில் மாநிலத்தலைவர், மஹாராஷ்ட்ரா), லியாக்கத் அலிகான்(தலைவர், எஸ்.டி.பி.ஐ, மஹாராஷ்ட்ரா), ஸாதிக் குரைஷி(கண்வீனர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, மஹாராஷ்ட்ரா), முஹம்மது ஸாஜித்(நிகழ்ச்சி கண்வீனர்) ஆகியோர் உரைநிகழ்த்தினர்.


இப்பொதுக்கூட்டத்தில் மஹாராஷ்ட்ரா மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அட்ஹாக் கமிட்டி தலைவராக சித்தீக் குரைஷியும், முஹம்மது ஸாஜித் செயலாளராகவும் அறிவிக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர். வழக்கத்திற்கு மாறாக இக்கூட்டத்தில் பெண்கள் அதிகளவில் கலந்துக் கொண்டனர். 16 மாநிலங்களில் நடைபெறும் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார இயக்கம் மார்ச் 18 ஆம் தேதி பாராளுமன்ற அணிவகுப்பைத் தொடர்ந்து நிறைவுறும்.

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP