சட்டதுறை அமைச்சர் அவர்களுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு
6.3.10

நேற்று சென்னை,தலைமை செயலகத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்களை, தமிழ்நாடு அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் சார்பாக பிரதிநிதிகள் சந்தித்து, தமிழ்நாடு திருமண பதிவுச்சட்டம் 2009ல் சிறுபான்மை முஸ்லிம் சமுதாய மக்கள்ளிடைய ஐயப்பாடுகளை நீக்கி முஸ்லிம் சமுதாய பிரமுகர்களுடன் கலந்தாலோசனை நடத்தி திர்வு
காணப்படும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 19.02.2010.அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து ,இச்சட்டம் குறித்து கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் உள்துறை முதன்மை செயலாளர் திருமதி. எஸ். மாலதி,இ.ஆ .ப , பத்திர பதிவுத் துறை தலைவர் திரு. ஆர். சிவகுமார்,இ.ஆ .ப , மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் செயலாளர் திரு. கே. தீனபந்து, இ.ஆ .ப , துணை செயலாளர் திரு. கே. இரகுபதி இ.ஆ .ப ,
சட்டத்துறை கூடுதல் செயலாளர் திருமதி. ஜானகி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், ஜமா அத்துல் உலமா சபை, தேசிய லீக், முஸ்லிம் தொண்டு இயக்கம்,இந்தியன் தவ்ஹீத் ஜமாஅத், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், மக்கள் ஜனநாயகக்கட்சி, முஸ்லிம் லா அக்காடமி, ஜமாஅத் இ இஸ்லாமிய ஹிந்த் போன்ற இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர் .
0 comments:
Post a Comment