அச்சுறுத்தலில் இஸ்லாம் ஆன்லைன் இணையதளம்
14.4.10
சர்வதேச அளவில் பிரபலமானது இஸ்லாம் ஆன்லைன் டாட் நெட் என்ற இணையதளம். செய்திகளுக்கும், விமர்சனங்களுக்கும், கட்டுரைகளுக்கும் ஒரு பொதுவான களம் வேண்டுமென்ற உலக முஸ்லிம்களின் ஆவலை பூர்த்திச் செய்யும் வண்ணம் கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கத்தாரிலுள்ள அல்பலாஹ் கலாச்சார நிறுவனத்தின் நிதியுதவியுடன் இவ்விணையதளம் துவக்கி வைக்கப்பட்டது.

அப்போது அந்நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி அவர்களால் இவ்விணையம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தும் வைக்கப்பட்டது.
அப்போது அந்நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஷெய்க் யூசுப் அல் கர்ளாவி அவர்களால் இவ்விணையம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தும் வைக்கப்பட்டது.
இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களைப் பற்றிய சமகால நிகழ்வுகளை உடனுக்குடனும் தெளிவாகவும் அளித்து வந்தது இவ்விணையதளம்.
ஒரு போதும் மன்னிப்புக் கேட்கவேண்டிய சூழல் இவ்விணையதளத்திற்கு ஏற்பட்டதில்லை.நூற்றுக்கணக்கான மார்க்க அறிஞர்களும், இதழியலாளர்களும் இவ்விணையதளத்தின் கெய்ரோ அலுவலகத்தில் கடுமையாக உழைத்து வந்தனர். அனைத்து முஸ்லிம்களையும் அனுசரித்து செல்லும் வகையில் அதனுடைய செயல்பாடுகள் அமைந்திருந்தனர். முஸ்லிமல்லாத கட்டுரையாளர்கள் கூட அதில் தங்கள் கட்டுரைகளை பதிவுச் செய்திருந்தனர்.
திடீரென இந்த மகத்தான செயல்பாடுகளைக் கொண்ட இஸ்லாம் ஆன்லைன் இணையதளம் ஸ்தம்பித்துப் போனது. உயரிய லட்சியத்தோடு செயல்பட்ட அதன் பணியாளர்களுக்கு இஸ்லாம் ஆன்லைனின் வெற்றி ஒரு கனவாகிப் போனது. இணையதளம் தற்ப்பொழுதும் செயல்படுகிறது.
ஆனால் உடனுக்குடன் செய்திகள் பதியப்படவில்லை. அதன் பழைய களையை இழந்துக் காணப்படும் பரிதாபகரமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய 350 பணியாளர்கள் இதற்கெதிராக போராட்ட முழக்கங்களை எழுப்புவதை யூட்யூபில் காணலாம்.
ஆனால் உடனுக்குடன் செய்திகள் பதியப்படவில்லை. அதன் பழைய களையை இழந்துக் காணப்படும் பரிதாபகரமான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய 350 பணியாளர்கள் இதற்கெதிராக போராட்ட முழக்கங்களை எழுப்புவதை யூட்யூபில் காணலாம்.
செயல்பாட்டில் சுதந்திரமும், உரிமைகளும் மீண்டும் கிடைப்பதற்காக அவர்கள் போராடுகின்றார்கள். கத்தாரைச் சார்ந்த நிதி முதலீட்டாளர்களுக்கும், எகிப்தைச் சார்ந்த பதிப்பகத்தார்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துமோதலே இவ்விணைய செயல்பாடு முடங்குவதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
ஆனால் ஃபலஸ்தீன் விவகாரத்தில் இஸ்லாம் ஆன்லைன் எடுத்துக் கொண்ட துணிச்சலான நிலைப்பாடுதான் இவ்விணையதளம் ஸ்தம்பிப்பதற்கு உண்மையான காரணம் எனக்கூறப்படுகிறது.
குறிப்பாக இஸ்ரேலின் கொடூரங்களைக் குறித்த அவர்களுடைய அறிக்கைகள், செப்டம்பர் 11க்குப்பிறகு இஸ்லாம் ஆன்லைன் வகித்த நிர்ணாயக பங்கு ஆகியன எக்காலத்திலும் பாராட்டத்தக்கதாகும். இவ்விஷயத்தில் தீவிரத் தன்மையைக் கைக்கொள்ளாமல் அதேவேளையில் அரபுகளின் ஊதுகுழலாகவும் இல்லாமல் மத்தியதர நிலைப்பாட்டைக் கொண்டது. ஆனால் எந்தவொரு அரசாங்கத்தையும் திருப்திப்படுத்துவதற்காக நடுநிலைப் போக்கை அவர்கள் கைக்கொள்ளவில்லை.
உலகின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல்வேறு துறையைச் சார்ந்த முஸ்லிம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கத்தான் அவர்கள் முயற்சித்தார்கள்.
ஒரு அரபு அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இன்னொரு அரபு நாட்டின் தலைநகரிலிருந்து இத்தகையதொரு இணையதள இதழ் வெளிவந்ததே மிகப்பெரிய அதிசயத்தக்க நிகழ்வாகும். முஸ்லிம்களின் தூரநோக்குப் பார்வைக் கொண்ட இலட்சியத்தின் அடிப்படையிலான இதழியல் பயணத்திற்கு தற்ப்பொழுது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இஸ்லாம் ஆன்லைன் அரபு உலகின் பத்திரிகை சுதந்திரத்திற்கு சின்னமாக விளங்கியது. இஸ்லாம் ஆன்லைனுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையால் அதன் வாசகர்களான கோடிக்கணக்கான முஸ்லிம்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மீண்டும் இஸ்லாம் ஆன்லைன் அதன் பழையப்பொலிவுடன் செயல்பட இறைவனிடம் பிரார்த்திப்போம். தனிப்பட்டரீதியான தவறான எண்ணங்கள் இஸ்லாம் ஆன்லைன் என்ற இணையதள இதழை வீழ்ச்சியடையச் செய்யாதிருக்கட்டும்.
0 comments:
Post a Comment