"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


தன் மோசமான நாட்களை சந்திக்கும் மோடி !

29.4.10

குஜராத் கலவரத்தின் போது, முதல்வர் நரேந்திர மோடிக்கும் போலிஸிற்க்கும் நடந்த 15 தொலைபேசி உரையாடல்களை உச்சநீதி மன்றத்தில் சமூக ஆர்வலர் தீஸ்தா சமர்பித்ததன் மூலம், மோடி தன் மோசமான நாட்களை எண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


நானாவதி கமிஷனிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஆவணங்களை தீஸ்தா,தன் பதில் மனுவின் மூலம் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், கலவரத்தின் போது போலீஸ் கமிஷ்னர் பாண்டேவிற்க்கு வந்த 302 அழைப்புகளில், இந்த 15 அழைப்புகளும் அடங்கும் என்று கூறியுள்ளார்.


குல்பர்க் சொசைட்டி மற்றும் நரோடா பாடியா,பாண்டேவின் அலுவலகத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் தான் உள்ளது. இதை சுட்டிக்காட்டி, குஜராத் கலவரத்தின் போது போலீஸ் அலட்சியமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு, கலவரக்காரர்களுக்கு உதவியது போன்ற காரணங்கள், இந்த 15 அழைப்புகளில் பதிவாகி இருக்கலாம் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


மோடியின் பி.ஏ விடமிருந்து வந்த 5அழைப்புகள், அவரின் ஒ.எல்.டி விடமிருந்து வந்த 2 அழைப்புகள், கூடுதல் பி.ஏவிடமிருந்து வந்த 7 மற்றும் கூடுதல் பி.ஏவிடமிருந்து வந்த ஒரு அழைப்பு என மோடியின் அலுவலகத்திலிருந்து 15 அழைப்புகள் கமிஷ்னர் பாண்டேவிற்க்கு வந்துள்ளது.


அந்த அழைப்புகளின் படி, வி.ஹெச்.பியின் முழு அடைப்பையும், பெரிய அளவில் வெளியே கலவரம் நடந்துக் கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், கமிஷ்னர் பாண்டே தன் அலுவலகத்திலயே தங்கியுள்ளார்.


அதேபோல,மற்றொரு பாண்டேவான சிவாநந்த் ஷா (அப்போதைய துணை கமிஷ்னர்) அஹ்மதாபாத் காவல் நிலையத்தை விட்டு வெளியேறவில்லை.


தீஸ்தாவிற்க்கு எதிராக குஜராத் அரசு தாக்கல் செய்த மனுவையடுத்து, தீஸ்தாவின் இக்கணக்குகள் வெளிவந்துள்ளது.


மற்றொரு விவகாரதில், குல்பர்கில் கலவரம் நடக்கும்போது, கூடுதல் கமிஷ்னரான எம்.கே.தான்டனிற்கு பாண்டேவிடமிருந்து 6 அழைப்புகள் வந்துள்ளது. தான்டனிடம் கலவரத்தை அடக்கக்கூடிய தனி படைகள் இருந்தும், காங்ரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி மற்றும் 69 அப்பாவிகள் உயிரோடு எரிக்கப்படுவதற்கு முன்னால், தான்டன் குல்பர்கை விட்டு வெளியேறியுள்ளார்.


குல்பர்க் கலவரத்தின் விசாரணை, அதன் எஸ்.ஐ.டி ஆணையர் ஆர்.கே.ஷா ராஜினாமா செய்ததையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் எஸ்.ஐ.டியிலிருந்து சிவாநந்த் ஷா மற்றும் கீதா ஜொஹ்ரி ஆகிய அதிகாரிகளை நீக்கக்கோரி மனு தாக்கல் செய்யபட்டது நினைவிருக்கலாம்.


சாட்சியாளர்களை தீஸ்தா மிரட்டுவதாக குஜராத் அரசு தாக்கல் செய்த மனுவை பதிலளிக்கும் வகையில், தீஸ்தா தன் மனுவில் இதுவரை 183 சாட்சிகள் கலவரக்காரர்களுக்கும் மற்றும் போலிஸாருக்கும் எதிராக எஸ்.ஐ.டியிடம் சாட்சி அளித்துள்ளதாக கூறியுள்ளார். ஆயினும், மோடியை விசாரித்துள்ள எஸ்.ஐ.டி தனது அறிக்கையை இம்மாதம் இறுதியில் சமர்பிக்கவுள்ளது. அறிக்கையின் முடிவில் நீதி கிடைக்குமா?

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP