கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
3.4.10
தேதி:02-04-2010
பத்திரிக்கை செய்தி
புதிய தேசிய கல்வி கொள்கையை எதிரித்து கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
புதிய தேசிய கல்வி கொள்கையை எதிரித்து கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா இன்று காலை 10.30 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்தில் MEPZ அருகில் நடைபெற்றது.
கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த மார்ச் மாதம் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இந்தியாவில் பல மாநில அளவில் சுவரொட்டிகள் மற்றும் கலந்தாய்வுக் கூட்டங்கள் போன்ற பிரச்சாரங்கள் மற்றும் பேரணி, ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டிலும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக இன்று காலை 10.30 மணியளவில் புதிய தேசிய கல்வி கொள்கையை எதிரித்து கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வரவேற்புரையை அபுபக்கர் நிகழ்த்தினார். இதனைத்தொடர்ந்து கண்டன உரையை Dr.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நன்றியுறையை சலீம் அஹமது நிகழ்த்தினார். இக்கூட்டத்திற்கு நாகூர்மீரான் தலைமை வகித்தார். இந்த ஆர்பாட்டத்தின் முடிவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்
• மத்திய அரசு உடனே புதிய தேசிய கல்வி கொள்கையை அமுல்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
• தழிழ்நாட்டினைப் போல் அனைத்து மாநிலங்களிலும் மாணவர்களின் நலனைக் கருதி நுழைவுத்தேர்வினை ரத்து செய்ய வேண்டும்.
• கல்வி வியாபாரமயம் ஆகுதலை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
• வெளிநாட்டு கல்வி நிலையங்களுக்கான மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யகூடாது.
போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
இப்படிக்கு
மீரான்
CFI Dist. President
0 comments:
Post a Comment