பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச தொழிற் பயிற்சி
15.7.10
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு வேலை வாய்ப்புச் சார்ந்த இலவச தொழிற் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தேசிய சிறு தொழில் கழகத்தின் சார்பில் இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளது. மேலும் விவரங்களுக்கு: 044-2225 2335, 95000 65747.
சிஎன்சி ப்ரோக்ராமிங், ஆட்டோ கேட், எம்எஸ் ஆஃபிஸ் டூல்ஸ், கம்ப்யூட்டர் பராமரிப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
இதற்கான நேர்முகத் தேர்வு, சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தேசிய சிறு தொழில் கழகத்தில் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறும்.18 முதல் 35 வயதுக்குட்பட்ட,பத்தாம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
0 comments:
Post a Comment