"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


அல்லாஹ்வின்பால் அழைக்கும் பணி: தமிழகத்தில் முன்னோடியாய் TNDFT

17.8.10

PFIன் கீழ் இயங்கி வருகிறது தமிழ்நாடு டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் ட்ரஸ்ட்(TNDFT) என்ற அறக்கட்டளை.


அதன் இஸ்லாமிய அழைப்புப் பணிகள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழகத்தில் சிறப்புடன் நடைபெற்று வருகின்றது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். 1993ம் ஆண்டு முதல் முறைப்படுத்தப்பட்டு இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை நாம் அறிந்தோம்.



இந்நிறுவனத்தின் கீழ் இரு பெரும் கல்விக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இஸ்லாத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் ஆண்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்ளும் வண்ணம் அறிவகம் என்ற கலாசாலை தேனி, முத்துதேவன்பட்டியில் அமைந்துள்ளது. பெண்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்ளும் கலாசாலை நெல்லை ஏர்வாடியில் அமைந்துள்ளது.


அந்த நிறுவனங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படை கடமைகளையும் ஒழுக்க மாண்புகளையும் கற்றுத் தருகின்றன. இங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கு உணவு, உடை, மருத்துவம், குழந்தைகளின் பராமரிப்புச் செலவு, ஆண்களுக்கு கத்னா போன்றதை இலவசமாக இந்த அறக்கட்டளையே செய்து வருகின்றது.


இதுவரை இஸ்லாத்தை மனமுவந்து ஏற்ற 2672 ஆண்கள் இந்த அறிவகத்தில் இஸ்லாத்தைக் கற்றுச் சென்றுள்ளனர். அதேபோல் 980 பெண்கள் அறிவகத்தில் இஸ்லாத்தைக் கற்றுச் சென்றுள்ளனர். இவர்களுக்கு 4 மாதங்கள் இலவசமாக இஸ்லாம் போதிக்கப்படுகின்றது.


இதுவரையிலும் 5842 கிராமங்களுக்கு இஸ்லாத்தை அறிமுகம் செய்து இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். கடந்த வருடம் மட்டும் 592 கிராமங்களில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர், அத்தோடு கடந்த வருடம் மட்டும்மொத்தம் 6 தஃவா சுற்றுப்பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.


இப்படி அமைதியாக ஆரவாரமின்றி அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைக்கும் பணிகள் தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது.


இன்று பல்வேறு அமைப்புகள் இந்த பணியினைச் செய்து வருகினறது. ஆனால் நாம் செய்த ஆய்வின்படி TNDFT தான் அனைத்துக்கும் முன்னோடியாகத் திகழ்கிறது.


அவர்களின் பணிகள் மெம்மேலும் சிறக்க வாழ்த்துகள்!

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP