அயோத்தி வழக்கு: நீதிமன்ற அதிகாரி பணியிட மாற்றம்
26.9.10
அயோத்தி நில உரிமை வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சிறப்புப் பணியில் இருந்த நீதிமன்ற அதிகாரி ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்த்து உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றும் 6 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற இணையதளத்தில் இந்த பணியிட மாற்றம் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரி சங்கர் துபே, அயோத்தி நில வழக்கில் அறிக்கைகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தேதி அறிவித்த நிலையில், வழக்கு தொடர்பான அவரது பணி ஏற்கெனவே முடிந்து விட்டது.
கோரக்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியாக சங்கர் துபே நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சாக்ஷி காந்த் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்த்து உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றும் 6 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உயர் நீதிமன்ற இணையதளத்தில் இந்த பணியிட மாற்றம் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரி சங்கர் துபே, அயோத்தி நில வழக்கில் அறிக்கைகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தேதி அறிவித்த நிலையில், வழக்கு தொடர்பான அவரது பணி ஏற்கெனவே முடிந்து விட்டது.
1 comments:
100 நாட்களில் 108 இளைஞர்களை இழந்து நிற்கிறோம்
Post a Comment