முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டம்
16.10.10
அயோத்தி பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் வரும் 16ம் தேதி லக்னோவில் நடைபெறுகின்றது.
இந்த கூட்டத்தில் பங்குக் கொள்வதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் நாளை லக்னோவிற்கு செல்கிறார். அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் இந்த கூட்டத்தில் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தீர்மானிக்கப்படும்.
அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் மற்றும் மதநிறுவனங்களில் பிரதிநிதித்துவ அமைப்பாகும்.
அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் மற்றும் மதநிறுவனங்களில் பிரதிநிதித்துவ அமைப்பாகும்.
0 comments:
Post a Comment