அருந்ததி ராய்-கிலானி மீது தேச துரோக வழக்கு...
27.10.10
டெல்லியில் சமீபத்தில் நடந்த கருத்தரங்கில் கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய், மாவோயிஸ்ட் ஆதரவு தலைவர் வரவர ராவ் ஆகியோர் பேசினார்.
தேச விரோதமாகவும் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் கருத்தரங்கில் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அருந்ததி ராய் பேசுகையில், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. இது வரலாற்று உண்மை என்று பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இந நிலையில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இவர்கள் மீது எந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்வது என்பது குறித்து டெல்லி போலீஸார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து கிலானி கூறுகையில், என் மீது ஏற்கெனவே 90 வழக்குகள் உள்ளன. இது 91வது வழக்கு என்றார்.
அருந்ததி ராய்க்கு காங்கிரஸ் கோரிக்கை:
இந் நிலையில் காஷ்மீர் குறித்து தெரிவித்த கருத்தை அருந்ததி ராய் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சத்ய பிரகாஷ் மாலவியா கூறுகையில், இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ராய், இதுபோன்று பொறுப்பற்ற வகையில் கருத்து தெரிவிப்பது உண்மையில் எதிர்பாராதது.
அவரது கருத்து இந்தியாவையும், சர்வதேச சமூகத்தையும் தவறாக வழிநடத்தும். இதனால் தனது கருத்தை ராய் திரும்பப் பெற வேண்டும் என்றார்
0 comments:
Post a Comment