"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


பாபர் மஸ்ஜித் பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளை தண்டிக்க கோரி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

5.12.10

பாபர் மஸ்ஜித் நீதியை வேண்டுகிறது என்ற முழக்கத்தோடு தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரசாரத்தை டிசம்பர் 6, 2010 முதல் ஜனவரி 30 வரை நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீர்மானித்துள்ளது.


இந்த தொடர் முழக்க விழிப்புணர்வு பிரசார தொடக்க நாள் மற்றும் முடியும் நாள் சுதந்திர இந்தியா வரலாற்றில் மறக்க முடியாத நாட்களாகும்.


இப்பிரச்சாரத்தின் முடிவு நாளான ஜனவரி 30, 1948யில் பாசிச ஹிந்துத்வா சக்திகளால் மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்டார்.


இப்பிரச்சாரத்தின் துவக்க நாளான டிசம்பர் 6 , 1992யில் அன்று அதே பாசிச ஹிந்துத்வா சக்திகளால் நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்பின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலான தொன்மைமிக்க பாபர் மஸ்ஜித் பள்ளிவாசலை இடித்து தகர்க்கப்பட்டது. இத்தகைய செயல்களுக்கு நாடே சான்று பகர்கிறது.


இந்த பிரசாரத்தில் "பயங்கரவாதத்தை முறியடிப்போம் மனித உரிமை காப்போம்" என்ற கருத்தை வலியுறுத்தி டிசம்பர் 10ஐ தீவிரவாத எதிர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படும்.


பாபர் மஸ்ஜித் வழக்கில் அநீதியான தீர்ப்பை அலஹபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய நிலையிலும் நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்க்கு பங்கு இருப்பதை புலனாய்வுத்துறை அமபலப்படுத்திய நிலையில் இந்த தொடர் முழக்க பிரசாரம் சரியான தருணத்தில் அமைகிறது.

இந்த பிரசாரத்தில் மாவட்ட அளவில் பொது நிகழ்சிகள், போஸ்டர் பிரசாரம், பாபர் மஸ்ஜித் ஆவண படக்காட்சிகள் , ஆர்பாட்டம், பேரணி, தர்ணா போன்ற பொது நிகழ்சிகள் இந்த பிரசாரத்தின்போது நடத்தப்படும். பாப்புலர் பிரண்ட்டோடு இணைந்து சமூகத்தின் பல்வேறு மட்டத்தில் களப் பணியாற்றிக்கொண்டிருக்கும் இயக்கங்கள் இந்த தொடர் முழக்க பாபர் மஸ்ஜித் மீட்பு பிரசாரத்தில் இணைந்து செயல்படும் .

பள்ளிவாசல் இடிக்கப்பட்டு அயோத்தியாவில் கலவரம் ஏற்பட்ட பின்பு லிபெர்ஹன் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் மூன்று மாதத்திற்குள் தனது அறிக்கையை சமர்பிக்கும் என அப்போது எதிர்பார்க்கப்பட்டது.



ஆனால் அது பதினேழு வருடங்கள் கழித்தே தனது அறிக்கையை தாக்கல் செய்தது. சமர்பிக்கப்பட்ட பிறகும் இன்று வரை மத்திய அரசாங்கம் எந்தவொறு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
பதினேழு வருடங்கள் கடந்த நிலையில் முஸ்லிம்கள் பள்ளிவாசல் இடிப்பு தொடர்பாக வழக்கில் நீதிக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பள்ளிவாசலை இடித்த குற்றவாளிகளோ, நாட்டில் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கின்றனர்.



இந்த சூழலில் டிசம்பர் 6 , 2010 அன்று டெல்லியில் ஜந்தர் மந்தர் வளாகத்தில் காலை 11:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை தர்ணா போராட்டத்தை நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீர்மானித்துள்ளது.



மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சமுதாய தலைவர்கள் உட்பட பலரை நாம் தர்ணாவில் பேச அழைத்துள்ளோம்.


இந்தியாவில் முழுமையாக சுதந்திரம், நீதி, பாதுகாப்பு ஆகியவற்றை நிறைவு படுத்தும் வகையில் பாபரி பள்ளிவாசலை அதே இடத்தில் மீண்டும் மறு நிர்மாணம் செய்யும் உரிமையை நிலை நிறுத்துவதற்க்காக போராட அனைத்து இந்தியா குடிமக்களும் முன் வரவேண்டும் என பாப்புலர் பிரண்ட் அழைப்பு விடுக்கிறது . என தேசிய பொது செயலாளர் கே.எம் ஷரீப் தெரிவித்துள்ளார்


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP