"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


விலைவாசி உயர்வைக் கண்டித்து தேசிய பெண்கள் முன்னணி பேரணி!!!

5.1.11

மக்களை வாட்டும் அத்தியாவசியப் பொருட்களின் எதிர்பாராத விலைவாசி உயர்வைக் கண்டித்து தேசிய பெண்கள் முன்னணி(NWF) சார்பாக கண்டனப் பேரணி கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் தலைமைசெயலகம் முன்பு நடந்தது.


இப்பேரணிக்கு தலைமைத் தாங்கி உரை நிகழ்த்தினார் மாநில NWF-ன் தலைவியான ஆசிரியை ரைஹானத்.


அப்பொழுது அவர் தெரிவித்ததாவது: 'நாட்டில் அத்தியாவசியப் பொருட்களான அரிசி, கோதுமை மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை பெரும் வியாபார சக்திகள் தீர்மானிக்கின்றன. அரசு இத்தகைய வியாபார சக்திகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்துவருகிறது. இதனால் சாதாரண மக்களின் வாழ்க்கை துயரமாக மாறியுள்ளது.


மத்திய,மாநில அரசுகள் விலைவாசி உயர்வை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். NWF இதனை எதிர்த்து வலுவாக போராடும். மேலும் பொதுமக்களிடம் இதுக்குறித்த பிரச்சாரத்தை எடுத்துச் செல்லும்.' இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.


இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் மாணவிகள், அவர்களது பெற்றோர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP