முஸ்லிம் அணுசக்தி விஞ்ஞானிகளை கொலைச் செய்யும் மொஸாத்!!!
25.1.11
மேற்காசிய நாடுகளில் பிரபல முஸ்லிம் விஞ்ஞானிகளின் கொலைகளில் இஸ்ரேலின் பயங்கரவாத உளவு அமைப்பான மொஸாதின் பங்கு மீண்டும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஈரான் அணுசக்தி விஞ்ஞானி மாஜித் ஷஹரியாரின் கொலையில் மொஸாதின் பங்கு தெளிவானதைத் தொடர்ந்து இதுத் தொடர்பாக கூடுதல் விபரங்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டீஷ், அமெரிக்க உளவு அமைப்புகளுடன் கைக்கோர்த்துக் கொண்டு முஸ்லிம் விஞ்ஞானிகளை கொன்றொடுக்கும் நீண்ட வரலாறு இஸ்ரேலின் மொஸாத் உளவு அமைப்பிற்கு உண்டு என ஈரானின் நியூக் டாட் ஐ.ஆர் என்ற இணையதளம் கூறுகிறது.
அமெரிக்காவில் உள்பட ஏராளமான மொஸாதினால் கொல்லப்பட்ட அரபு விஞ்ஞானிகளின் பெயர்களை இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.
எகிப்து நாட்டைச் சார்ந்த ஸாமிர் நஜீப், நபீல் அல்க்வலானி, நபீல் அஹ்மத் ஃபுழைஃபல், அரபு உலகத்தின் ஐன்ஸ்டீன் என புகழப்படும் முஸ்தஃபா அலி முஷ்ரிஃபா, ஜமால் ஹம்தான், ஸஈத் ஸய்யித் காதிர், ஸல்வி ஹபீப், லெபனானைச் சார்ந்த இயற்பியல் விஞ்ஞானியான ரமால் ஹஸன் ரமால், அரபு உலகின் தாமஸ் ஆல்வா எடிஷன் என புகழப்படும் லெபனானைச் சார்ந்த விஞ்ஞானி ஹஸன் காமில் ஸஹாப் ஆகியோர் மொஸாதினால் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.
2010 நவம்பர் 29-ஆம் தேதி ஈரானில் பேராசிரியரான மாஜித் ஷஹரியாரி கொலைச் செய்யப்பட்டார். அன்றைய தினமே மற்றொரு தாக்குதலில் ஃபரீதுன் அப்பாஸி தவானி என்ற ஈரான் விஞ்ஞானியும்கொல்லப்பட்டுள்ளார்.
சமீபத்தில் டெல் அவீவில் கூடிய மொஸாதின் கூட்டத்தில் ஷஹரியாரின் கொலை உள்பட பல்வேறு விஷயங்களைக் குறித்து விவாதிக்கப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின.
2010 ஜனவரியில் டெஹ்ரானில் நடந்த குண்டுவெடிப்பில் அணுசக்தி விஞ்ஞானியும், பல்கலைக்கழக பேராசிரியருமான மசூத் அலி முஹம்மதி கொலைச் செய்யப்பட்டிருந்தார். டிசம்பர் மாத இறுதியில் ஈராக்கின் இளம் வயதைக்கொண்ட அணு விஞ்ஞானி முஹம்மத் அல்ஃபவ்ஸ் மர்மமனிதர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். யுரேனியத்தை செறிவூட்டுவதற்கான அவருடைய புதிய ஃபார்முலா ஏராளமான மேற்கத்திய பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

350 ஈராக் நாட்டு அணு விஞ்ஞானிகள், 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிர்யர்கள் கொலையில் மொஸாதிற்கு பங்குள்ளதாக ஏற்கனவெ செய்திகள் வெளியாகியிருந்தன. இவற்றில் முஹம்மது ஃபவுஸின் கொலை கடைசியாக நடந்ததாகும்.
செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்
0 comments:
Post a Comment