"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


சீதனம் எனும் பேரில் மார்க்கத்தை சீரழிக்காதே!

9.3.11







மனிதா ஏன் நீயும் உன்
ஆண்மைக்கு விலை பேசுகிறாய்
ஒற்றைக் காலில் நிற்க இயலாத
உனக்கு எதற்கடா திருமணம்!

சீ! தனம் என்ற பெருங்கல்லை ஏன்?
அந்த அப்பாவி மாமா, மச்சான்...
என்ற பரம்பரையின் தலையில் போடுகிறாய்
சீதனம் எனும் பேரில் மார்க்கத்தை சீரழிக்காதே!

பாவம் அவர்கள் பாதம் தேயும் வரை
பாதையில் அழைந்து களைந்து விட்டார்கள்
உன்னைப் போல வீர ஆண்களுக்காக
வீடு, வாசல், வீதியில் செல்ல வாகனம்
என்றல்லவா நீ கேட்கின்றாய்!

கல் நெஞ்சம் கொண்ட கணவனா?
அல்லது காசு கேட்கும் கயவனா நீ?
உழைத்து வாழ முடியாத நீ ? எப்படி
உன் மனைவி மக்களுக்கு உழைத்துப் போடுவாய்!
பெண் என்ற புதையல் வேண்டுமா உனக்கு

மஹர் என்ற மாணிக்கத்தைக் கொடு.
சீதனத்துக்கு அடிமையாகி விடாதே!
சீராய் சிந்தித்துப் பார் சோதனைக்குள்ளாகி விடாதே!
பணம் எனும் கூரிய ஆயுதத்தால் பிணமாகி விடாதே!
சிந்தித்துப் பார்.

வானமே இடிந்து தலையில் வீழ்ந்தாலும்
பூமி அதிர்ந்து உன்னை உள் இழுத்தாலும்
மனிதா நிலையாய் நில்லடா
சீதனத்து சந்தையில் விலை போகாதே.

உன்னிடம் இருக்க வேண்டியது துணிவடா
மஹர் கொடுத்து மணப்பேன்.
மணப் பெண்ணை மறை வழியில் நடத்துவேன்.
என் வாழ்வை இன்ஷா அல்லாஹ்.


எமது சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்றதும் எனது நெஞ்சினுள் நெருடல்களை ஏற்படுத்தியதுமான வரதட்சணை பற்றி இந்த முற்றத்திலே எனது முகமறியாத உறவுகளின் கருத்துக்களை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

By - Sifna, Sammanthurai, Sri Lanka

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP