"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


அமெரிக்கா ஒரு ரவுடி நாடு என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது

5.5.11

உசாமா பின் லேடன் படுகொலையின் மர்மம் இன்னும் அகலவில்லை, செய்திகள் பெற ஒரே வழியாக மூலமாக அமெரிக்க ஊடகங்கள் மட்டுமே இருக்கும் வரை இந்த மர்மம் தொடரும். கிடைத்த செய்திகளை வைத்து பார்க்கும் போது, பலகீனமான நாடுகளின் மீது தனது மேலாதிக்கத்தை செலுத்தவும், வெட்கமேயில்லாமல் சர்வதேச சட்டங்களை மீறுவதிலும் பொதுவான நாகரீகமான நடைமுறைகளை பின்பற்றாமல் இருப்பதிலும் தான்

நம்பர் ஒன் ரவுடி என்பதை மீண்டும் அமெரிக்கா நிரூபித்துள்ளது.



அமெரிக்க ஊடகங்கள் இடைவிடாத பிரச்சாரம் மற்றும் செய்திகலை பூதகரமாக்கி வெளியிடுவது என்ற போதிலும் நமக்கு தெரியவரக்கூடிய உண்மை, பென்டகன் மற்று உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதில் மூளையாக செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்ட உசாமா பின் லேடன் சர்வதேச தீர்பாயம் ( நீதி மன்றம்) அல்லது சவூதி அரேபியா கத்தார் ஆகிய நாடுகளிடம் விசாரணைக்காக ஒப்படைத்துவிடுகிறோம் என்று 2001 ஆம் ஆண்டிலேயே தாலிபான்கள் முன்வந்துள்ளனர் என்பதும் அதனை அமெரிக்கா மறுத்ததோடு மட்டுமில்லாமல் முதலில் ஆஃப்கானிஸ்தானையும் பின்னர் ஈராக் ஆகிய நாடுகளின் மீதும் படையெடுத்து லட்சக்கணக்கில் மக்களை கொன்று, பலரை முடமாக்கி அழித்தது, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று தவறாக பெயரிட்டு கணக்கேயில்லாமல் பல அப்பாவி பச்சிளங்குழந்தைகளை ஆதரவற்ற அனாதைகளாக்கியுள்ளது என்பதும் நமக்கு தெரியவந்துள்ளது.



அமெரிக்கா பிற நாடுகளின் இறையாண்மையை துச்சமென மதிக்க கூடியது சர்வதேச விதிமுறைகல் நடைமுறைகளையும், சிவில் மற்றும் மனித உரிமைகளை மீறி பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பான பல சிறைச்சாலைகளை (கான்சன்டிரேஷன் கேம்ப்) நடத்திவருகிறது. குவான்டனாமோ பே எனுமிடத்தில் மட்டும் சுமார் 200 பேர் விசாரணையில்லாமல் பல வருடங்களாக மிருகங்கள் அடைத்து வைக்கப்படும் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவருகிறது.



சி.ஐ.ஏ சேவை செய்யும் நாடுகளில் இரகசிய சிறைக்கொட்டடிகளை (டிட்டேன்சன் கேம்ப்) நிர்மாணித்து சித்திரவதை சேவைகலை செய்துவரும் தற்போது வெட்டவெளிச்சாமாகியுள்ளது.இறந்த உடலை கடலில் எறிவதென்பது நாகரீகமானதல்ல மத ஒழுங்கு மற்றும் நாகரீக வரம்புகளை மீறிய செயல்.



பல மதங்களிடமிருந்தும் ஆதரவை பெற்றுவருவதாக பராக் ஒபாமா கூறிக்கொண்டாலும் தற்போது அவை முஸ்லிம் உலகை வன்முறையை தூண்டச் செய்யும் கருவியாகத்தான் பயன்படுகிறது என்பது தெரியவருகிறது. எனினும் உசாமா பின் லேடன் கொலைக்கு பிறகு உசாமாவை தேடுகிறோம் என்று ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் இனிமேலும் தங்க இவர்களுக்கு அருகதையில்லை.



இந்த நவீன காலனியாதிக்க சக்திகள் ஒரு சதாம் ஹூஸைன் அல்லது ஒரு உசாமாவை கொல்வதன் மூலம், அ ந்நிய ஆதிக்க சக்திகளின் கொள்ளை சுரண்டல் மற்றும் ஆக்கிரமிப்பு படையெடுப்புக்கு எதிரான மண்ணின் மைந்தர்களின் எதிர்ப்பை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனமானது.வரலாற்றை ஆதராமாக கொண்டால் நமக்கு தெரியவருகிறது, ஆக்கிரமித்திருக்கும் வெளிநாட்டினர் தங்களை காப்பாற்றிக்கொள்ள வீட்டுக்கு ஓடி செல்லும் வரை, ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் மக்களின் எதிர்ப்பு ஒயாது தொடரும் என்று தெரியவருகிறது.



எல்லா வகை தீவிரவாதத்தையும் கண்டிப்பதோடு, அடக்குமுறைகயை கட்டவிழ்த்துவிடும் வல்லரசு நாடுகளின் மேலாதீக்கம் தோற்கடிக்கப்படும், எல்லா நாடுகளின் இறையாண்மையும் சுதந்திரமும் சமமாக பாதுகாக்கப்படும், அதன் மூலம் உலகம் அமைதியான சகாப்தம் நோக்கி வழி நடத்தப்படும் என்பதே மனிதகுலத்தின் சார்பாக எமது ஆழ்ந்த நம்பிக்கை.



இ.எம். அப்துல் ரஹ்மான்,

தேசிய தலைவர்,

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP