"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


ரமழான் நோன்பின் சட்டங்கள்

31.7.11

ரமழான் நோன்பு முஸ்லிமான பருவ வயதையடைந்த புத்திசுவாதீனமுள்ள சக்தியுள்ள ஊரில் தங்கியிருக்கக்கூடிய அனைவரின் மீதும் கடமையானதாகும்.


மிகுந்த வயது முதிர்ச்சி குணமாகுமென்று எதிர்பார்க்க முடியாத நோய் போன்ற காரணத் தால் நோன்பு நோற்க இயலாதவர்கள் ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு உணவு வழங்க வேண்டும்.


தனது நோய் நீங்கிவிடுமென்று எதிர்பார்க்கக்கூடிய நோயாளி தான் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் நோன்பை விட்டுவிடலாம். நோய் குணமான பின் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.


கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும்.


மாதவிலக்கு மற்றும் பிரசவத்தீட்டு உள்ள பெண்கள் அக்காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது. அக்காலகட்டத்திற்குப் பின் அவர்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்ற வேண்டும்.


தண்ணீரில் மூழ்குதல் தீவிபத்தில் சிக்குதல் போன்ற அபாயங்களிலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விடும் கட்டாயத்திற்கு ஆளானவர் நோன்பு நோற்றுச் சிரமப்பட வேண்டியதில்லை. தவறிய நோன்பைப் பின்னர் நிறைவேற்றிக் கொள்ளலாம்.


பிரயாணி விரும்பினால் நோன்பு நோற்கலாம். விட்டுவிட அவருக்கு அனுமதியிருப்பதால் விட்டுவிடவும் செய்யலாம். இப்பயணம் உம்ரா போன்றதற்காகவோ வாகன ஓட்டி (டிரைவர்)களாகப் பணி செய்வதற்காகவோ இருக்கலாம். இத்தகையவர்கள் தாம் வசிக்கும் ஊர்களுக்கு வந்தவுடன் விடுபட்ட நோன்பை நோற்றுக் கொள்ளவேண்டும்.


நோன்பை முறிக்கக்கூடியவை

மனைவியுடன் உடல் உறவு கொள்வது: நோன்பு நோற்று இருக்கும் நிலையில் உடல் உறவு கொண்டு விட்டால் முறிந்த நோன்பை மீண்டும் நோற்பதுடன் அதற்கான அபராதத்தையும் நிறைவேற்றவேண்டும்.அபராதத்தில் முந்தியது ஓர் அடிமையை உரிமை விடுவதாகும். அல்லது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும்.


சுய இன்பத்தைக் கொண்டு அல்லது மனைவியுடன் கொஞ்சிக் குலாவுவது கொண்டு இந்திரியம் வெளிப்படல் உண்பதும் குடிப்பதும். இது பயனுள்ளதாயினும் அல்லது பயனற்ற புகை போன்றதாயினும் சரியே.


உணவு உண்பதற்குப் பகரமாக குளுக்கோஸ் ஊசி போட்டுக் கொள்வது. (உணவுக்குப் பகரமில்லாத நோயைக் குணப்படுத்தும் ஊசி போட்டால் நோன்பு முறியாது.)


மாதத்தீட்டு மற்றும் பிரசவ இரத்தம் வெளிப்படுவது.

இரத்தம் குத்தி வாங்குவது அல்லது நரம்பு வழியாக இரத்தத்தை வெளியாக்குவது. (பொன்னி மூக்கு உடைவதாலோ பல் உடைவதாலோ தானாக இரத்தம் வெளிப் பட்டால் நோன்பு முறியாது.) வேண்டுமென்றே வாந்தி எடுப்பது. (நாட்டமின்றி வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறியாது)


நோன்பை முறிக்கக்கூடிய காரியங்களுள் ஏதாவது ஒன்றை மறந்தோ அறியாமலோ கட்டாயத்திற்கு உட்பட்டோ செய்து விட்டால் நோன்பு முறியாது.


நோன்பின் ஒழுக்கங்கள்


நோன்பாளி இச்சையைத் தூண்டும் காட்சிகளை விட்டும் வெறுக்கத்தக்க காட்சிகளை விட்டும் தன் பார்வையை தாழ்த்திக் கொள்ளவேண்டும்.


புறம் பேசுதல் கோள் மூட்டுதல் பொய்யுரைத்தல் முதலியவற்றை விட்டும் நாவைப் பேண வேண்டும்.


வெறுக்கத் தக்க செய்திகளையும் இசைகளையும் கேட்பதை விட்டும் காதுகளைப் பேண வேண்டும்.


மற்றும் இதர உடலுறுப்புகளையும் பாவத்தில் மூழ்க விடாமல் பாதுகாக்க வேண்டும்.


சாப்பிடுவதையும் குடிப்பதையும் அதிகமாக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும்.


நோன்பு நோற்று இருக்கும் நிலையிலும் நோன்பு திறந்த பிறகும் உள்ளத்தை அல்லாஹ்வின் மீது அச்சத்துடனும் ஆதரவுடனும் வைத்துக்கொள்ளவும்.


இந்நிலை வணக்கங்கள் அனைத்தின் இறுதியிலும் அமைந்திருக்க வேண்டும்.



உடலுறவு முதலிய பெருந்தொடக்கு நிலையில் இருப்பவர் நோன்பு நோற்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டால் உணவு உண்டுவிட்டு நோன்பு நோற்பதற்காக நிய்யத் (எண்ணம்) வைத்துக் கொள்ளலாம். பின்னர் குளித்துத் தூய்மையாக்கிக் கொள்ளலாம்.


மாதத்தீட்டு மற்றும் பிரசவத்தீட்டு இவற்றிலிருந்து அதிகாலைக்கு முன் துப்புரவாகி விட்ட பெண் அன்றைய நோன்பை நோற்பது கடமை.


நோன்பாளி தன் பல்லைப் பிடுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் பிடுங்கிக் கொண்டு அதற்கு மருந்து வைத்துக் கொள்ளலாம். காதுகளிலும் கண்களிலும் சொட்டு மருந்திட்டுக் கொள்வதும் கூடும். சொட்டு மருந்தின் ருசியை தொண்டையில் உணர்ந்தாலும் சரி. நோன்பு முறியாது.


கடுமையான வெப்பநிலையில் சகிக்க முடியாத நோன்பாளி தன் உடலைக் குளிர் படுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.


நோன்பு நோற்ற நிலையில் பல் சுத்தம் செய்து கொள்ளலாம்.


ஆஸ்துமா போன்ற நோய்களால் ஏற்படும் சுவாச நெருக்கடியை இலேசு படுத்தும் ஸ்ப்ரேயை நோன்பாளி தன் வாயில் செலுத்திக் கொள்வதால் நோன்பு முறியாது.


வாய் வரண்டு போய் சிரமமாக இருந்தால் நோன்பாளி உதடுகளை ஈரப்படுத்திக் கொள்ளலாம். அல்லது (புழபடiபெ செய்யாமல்) வாய் கொப்பளித்துக் கொள்ளலாம்.


நன்றி:ஒற்றுமை.காம்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP