"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை

15.8.11

கண்டிக்கத்தக்க காவல்துறை மற்றும் தமிழக அரசின் அநீதி!

பாப்புலர்ஃப்ரண்ட்ஆஃப்இந்தியாவின்சார்பாகமுஸ்லிம்சமூகத்தின்கண்ணியத்தை நிலை நிறுத்தும் வகையில் கடந்த 3 வருடங்களாக ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பை தமிழகத்தில் நடத்தி வருகின்றோம். நம் இந்திய தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, இரத்தம் சிந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும், அவர்களின் தியாகங்களை பெருமைப்படுத்தும் விதமாகவும், முஸ்லிம் சமூகத்திற்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்திலும் இந்த சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி வருகின்றோம்.ஜாதி, மத பேதமில்லாமல் அனைவரும் ஒன்றினைந்து பாடுபட்ட சுதந்திரப் போராட்ட நினைவலைகளை ஒவ்வொரு இந்தியக்குடிம்கனின் உள்ளத்திலும் பூத்துக்குலுங்கச் செய்யும் விதமாக இந்த சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி வருகின்றோம்.



கடந்த 3 ஆண்டுகளாக மதுரை, கும்பகோணம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் அணிவகுப்பு நடத்தியுள்ளோம்.



கடந்த அரசும் மைதானத்தில் நடத்த அனுமதியளித்தது. எந்த விதமான சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் மிகவும் அமைதியோடும், கட்டுப்பாடோடும் எல்லோரும் பாராட்டும் வகையில் நடத்தினோம்.



இந்த வருடம் சுதந்திர தின அணிவகுப்பை நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் சிறப்பாக நடத்த தீர்மானித்து, கடந்த 20.07.2011 அன்றே முறைப்படி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தோம்.



இதற்கு அனுமதி வழங்காமல் மேண்டுமென்றே காலதாமதம் செய்து நேற்று (13.08.2011) சனிக்கிழமை அன்று சுதந்திர தின அணிவகுப்பை தடை செய்து மறுத்துவிட்டது காவல் துறை. நீதிமன்றத்தை அணுகக்கூட வாய்ப்பு வழங்காமல் முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளுக்கு மாபெரும் துரோகமிழைத்துவிட்டது காவல்துறை.



முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி விடக்கூடாது என்ற காழ்புணர்ச்சியோடு உளவுத்துறையும், காவல்துறையும், தமிழக அரசும் திட்டமிட்டு அனுமதி மறுத்துள்ளனர்.



சுதந்திர தின அணிவகுப்பை மறுத்ததோடு மட்டுமல்லாமல் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி மறுத்து தடை செய்த இந்த மோசமான நிகழ்வு முஸ்லிம்கள் சுதந்திர தினத்தை கொண்டாடக்கூடாது என்ற காவல்துறையின் கெட்ட எண்ணத்தையும் பாரபட்சத்தையும் மட்டுமே காட்டுகிறது.



இதற்கு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெரும்பான்மையாக பெற்று ஆட்சிகட்டிலில் அமர்ந்திருக்கும் அதிமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.இது இந்திய சுதந்திரத்திற்காக தங்கள் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர் தியாகம் செய்த முஸ்லிம்களின் தியாகத்தை அவமதிப்பதாகும்.



சுதந்திர தினத்தன்று நாடே கோலாகலத்தில் மூழ்கியிருக்கும் போது அந்த சுதந்திர தினத்தை கொண்டாடக் கூட சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அனுமதியை மறுத்துள்ளது பெரும் அநீதியாகும்.


காவல்துறை மற்றும் தமிழக அரசின் இந்த உரிமை மீறலையும், சிறுபான்மை விரோதப் போக்கையும் கண்டிக்கும் வகையில் வருகின்ற 17.08.2011 அன்று மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த தீர்மானித்துள்ளோம்.



சுதந்திரம் நமது பிறப்புரிமை; அதை எவர் தடுத்தாலும் விடமாட்டோம் என்ற செய்தியை உலகிற்கு பறைசாற்ற, முஸ்லிம்களின் கண்ணியத்தை பாதுகாக்க, முஸ்லிம்களின் உரிமையை நிலை நாட்ட நடைபெறும் இந்த போராட்டத்தில் அணி அணியாய் கலந்து கொண்டு நமது கண்டனத்தை பதிவு செய்ய அலைகடலென ஆர்பரித்து வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP