"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேல்முறையீட்டு மனு தாக்கல்

24.9.11

கோழிக்கோடு:சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி மறுத்த கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது.


கடந்த ஆகஸ்ட் 15 அன்று கேரளாவில் நான்கு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்த இருந்த சுதந்திர தின அணிவகுப்புக்கு உயர்நீதிமன்றம் தனிநபர் பென்ச் அனுமதி மறுத்தது. அதற்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் கேரளா மாநில செயளாலர் அப்துல் ஹமீத் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.


தேச பக்தியையும், ஒருமைப்பாட்டையும் பறைசாட்டுகின்ற அதை அதிகரிக்க செய்கின்ற நல்ல ஒரு வாய்ப்புக்கு அனுமதியளிக்கவில்லை என்பதால்தான் இம் மேல் முறையீட்டுமனு.இதற்கு முன் பல இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தியுள்ள சுதந்திர தின அணிவகுப்பால் பொது சமூகத்திற்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்பட்டது இல்லை என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும் 2012 ஜனவரி 26 அன்று அணிவகுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் கோரப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP