"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


"சுதந்திரம் எங்களது பிறப்புரிமை" கேரளாவில் மாபெரும் பிரச்சார பேரணி

16.10.11

clt parade

EM TVM



திருவனந்தபுரம்: சுதந்திரம் எங்களது பிறப்புரிமை என்ற தலைப்பில் கேரளாவில கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிரச்சாரத்தின் இறுதியாக மூன்று இடங்களில் மாபெரும் பேரணியுடன் இப்பிரச்சாரம் முடிவடைந்தது. திருவனந்தபுரம், பெரும்பாவூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய நகரங்களில் நடைபெற்ற இப்பேரணியில் பெண்கள் உட்ப்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



பெரும்பாவூரில் நடைபெற்ற இப்பிரச்சாரப் பேரணி அரசு மருத்துவமனைஅருகில் இருந்து சரியாக 3 மணி அளவில் தொடங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பெரும்பாவூர் மாவட்டத்தைச்சேர்ந்த உறுப்பினர்கள் சீறுடை அணிந்து பேண்டு வாத்திய முழக்கத்துடன் மாபெரும் அணிவகுப்பையும் நடத்தினர். இந்த அணிவகுப்பு அங்கு கூடியிருந்த மக்களை வெகுவாக கவர்ந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய அணிவகுப்பையும், அணிவகுப்பின் போது அவர்களிடம் காணப்பட்ட ஒழுக்கத்தையும் வெகுவாக பாராட்டினார்கள். அணிவகுப்பிற்கு பிறகு ஆயிரக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் மற்றும் அதன் ஆதராவாளர்கள் பெரும் திரளாக பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் போது மாநில அரசின் சிறுபான்மை விரோத போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஊழலுக்கு எதிராகவும், அநீதிக்கு எதிராகவும், குரல் எழுப்பி கோஷ அட்டைகளை ஏந்திச்சென்றனர்.


திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற்ற பேரணி சரியாக 3 மணி அளவில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அலுவலகம் அருகே தொடங்கியது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் சீறுடை அணிந்து அணிவகுப்பு நடத்த அவர்களுக்கு பின்னால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட மாபெரும் பேரணி நடைபெற்றது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தான்மித்ரா மற்றும் ஆழப்புழா ஆகிய மாவட்டங்களிலிருந்து பாப்புலர் ஃப்ரண்டின் தொண்டர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்கள் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக மஹாத்மா காந்தி திடலை அடைந்து அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் ஈ.எம். அப்துர்ரஹ்மான் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கேரள மாநில தலைவர் கரமணா அஷ்ரஃப் மெளலவி தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில், பி. நூருல் அமீன் கேரள மாநில செயற்குழு உறுப்பினர், கேரள மாநில எஸ்.டி.பி.ஐயின் செயலாளர் துலசீதரன், நீலலோகிதாசன் நாடார், டாக்டர் எம்.எஸ் ஜெயபிரகாஷ், ஃபத்துதீன் ரஷாதி, வழக்கறிஞர் ஜேம்ஸ் பெர்னான்டஸ் மற்றும் சுபாஷ் போஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.


police


பெரும்பாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அவர்கள் கலந்து கொண்டார். நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும்போது மக்கள் தங்களை தடுக்கும் இந்த கொடிய சட்டங்களை உடைக்க முன் வருவார்கள் என்று அரசாங்க அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார். தேசிய செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் கோயா அவர்கள் முக்கிய குறிப்புகளை வெளியிட்டார். ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் பொருளாளர் முஹம்மது ஈசா மெளலவி, எஸ்.டி.பி.ஐயின் மாநில பொருளாளர் சாம் குட்டி ஜேகப், கே.கே. பாபுராஜ், கே.கே ஹுஸைன், கே முஹம்மது அலி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.



‌கோழிக்கோட்டில் வைத்து நடைபெற்ற இப்பேரணி அரயாடத்துபாளத்திலிருந்து தொடங்கிய் மாவூர் சாலை வழியாக கடற்கரையில் முடிவடைந்தது. வழக்கறிஞரும் பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய பொருளாளருமான கே.பி.ஷரீஃப் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார். வழக்கறிஞர் ரஃபீக் குட்டிக்காத்தூர், பாப்புலர் ஃப்ரண்டின் கர்நாடக மாநில தலைவர் இல்யாஸ் தும்பே, ஏ. வாசு, எஸ்.டி.பி.ஐயின் கேரள செயலாளர் எம்.கே. மனோஜ் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.‌‌


கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடைபெற இருந்தசுதந்திரதின அணிவகுப்பிற்கு கேரள அரசாங்கம் தடைவிதித்தது. இவர்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று உளவுத்துறை நிறுவனங்கள் தவறான செய்தியை அளித்ததின் விளைவால் நான்கு மாவட்ட ஆட்சியரும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடைவிதித்தனர். இதனை கண்டித்தும் மக்கள் விழிப்புணர்வு ஏறப்டுத்தும் வகையிலும் "சுதந்திரம் எங்களது பிறப்புரிமை" என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் செம்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 வரை பிரச்சாரம் நடைபெற்றது.


மூன்று இடங்களிலும் நடைபெற்ற இப்பிரச்சாரத்தின் மூலமாக பாரபட்சத்துடன் நடந்துகொள்ளும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுகின்றோம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அநீதிக்கு எதிரான போராட்டங்களும், பிரச்சாரங்களும் இனி வரும் காலங்களில் இன்னும் வீரியத்துடன் நடைபெறும்.


இந்த நிகழ்ச்சிகளில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என காவல்துறையினரும், பத்திரிக்கைகளும் தெரிவித்தன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP