"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


மதரசாக்களை விரும்பும் இந்து மாணவர்கள்..

29.10.09


உத்தர் பிரதேச மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றில், அங்குள்ள ஹிந்துக்கள் அரசு நடத்தும் பள்ளிகளுக்கு செல்லாமல் மதரசாக்களுக்கு சென்று கல்வி கற்கவே விரும்புகின்றனர் என்று அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஆய்வறிக்கையில் இந்த மதரசாக்களில் உள்ள மாணவர் எண்ணிக்கையில் இந்துக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளது.இஸ்லாமியா அராபியா ஆலிமுல் உலூம் என்ற மதரசாவில் முஸ்லீம் மாணவர்களுக்கு அரபி மற்றும் உர்துவும் இந்து மாணவர்களுக்கு சமஸ்கிருதமும் கற்றுத்தரப் படுகின்றது.
இந்த மதரசா உ.பி யின் பாரபங்கி பகுதியில் உள்ளது.இந்த ஆய்வறிக்கையை லக்னோவை மையமாக கொண்டு செயல்படும் Better Education through Innovation (BETI) என்ற அமைப்பு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு ஐந்து மதரசாக்களில் நடத்தப்பட்டது. இந்த ஐந்து மதரசாக்களும் அரசு உதவியின்றி அப்பகுதி மக்களின் பொருளாதார உதவியைக்கொண்டும், நன்கொடைகள் மற்றும் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் ஆகியவற்றை கொண்டுமே நடத்தப் பட்டு வருகின்றன.
இந்த ஐந்து மதரசாக்களில் மூன்று மார்க்கக் கல்வியை தவிர உலக கல்வியையும் கற்றுத் தருகின்றன.UNICEF -இன் தலைவர் வினோபா கவுதம் இது பற்றி கூறுகையில், "மதரசாக்கள் குழந்தைகளுக்கு ஒரு முழுமையான கல்வியின் சூழலை உருவாக்கி தருகின்றது.
இது மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகும். இது போன்ற கல்விச் சூழல் கல்வி கற்பதற்கு ஆர்வத்தினை ஏற்படுத்தி மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும்" என்று கூறினார்.
UNICEF சார்பில் கவுதம் இந்த மதரசாக்களை தான் அடிக்கடி பார்வையிட்டு வருவதாகவும் அதற்கான புத்தகங்களை ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் மொழிப்பெயர்த்து வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
நன்றி,

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP