முத்துபேட்யில் இரு மதத்தினர் மோதல்
30.1.10
முத்துப்பேட்டையில் இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் கடைகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. அரசு பஸ் உடைக்கப்பட்டது.
முத்துப்பேட்டைஅடுத்த பேட்டையைச் சேர்ந்தவர் சிவா (39). இவர் பாஜக மாவட்டச் செயலாளராக உள்ளார்.
இவர், நேற்று முன்தினம் மாலை தனது டாடா சுமோவில் முத்துப்பேட்டை கடைவீதி வழியாக வீட்டிற்கு சென்றபோது தெற்கு வீதி சந்திப்பில் அவரது கார் மீது, மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியதில் கார் கண்ணாடி உடைந்தது.
இதனால், தன் மீதும், கார் மீதும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக் கோரி தனது ஆதரவாளர்களுடன் முத்துப் பேட்டையில் சிவா புகார் செய்தார்.
இந் நிலையில், தெற்கு வீதியில் நடந்து சென்ற பேட்டையைச் சேர்ந்த டைலர் தங்கராசு (57), நடராஜன் ஆகியோரை சில இளைஞர்கள் வழி மறித்துத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த இரு சம்பவங்களையடுத்து பாஜகவைச் சேர்ந்தவர்கள் சிவா தலைமையில் திரண்டு, பேட்டை பகுதிக்குள் இன்னொரு நுழையக் கூடாது என்று தடுத்தனர். இதனால், இரு மதத்தினர் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் இரும்பு பைப், உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.
இந் நிலையி்ல் சிலர் கடைகளை தாக்கி சூறையாடி தீ வைத்ததோடு, திருத்துறைப்பூண்டி சென்ற அரசு பஸ்சை தாக்கி சேதப்படுத்தினர்.
இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

0 comments:
Post a Comment