இண்டர்நெட் சுதந்திரத்திற்கு பாதிப்பு - ஹிலாரி
29.1.10
சீனாவில், கூகுள் இணையதளம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள யூ-டியூப் ஆகியவற்றின் போலியான இணையதளங்கள் வெளியாகியுள்ளது.
கூகுளின் போலி தளத்திற்கு கூஜி என பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப் இணையதளத்தின் போலிக்கு யூடியூப்சிஎன் என்று பெயரிட்டுள்ளதோடு, கூஜி இணையதளத்தில் கூகுள் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர்.
சமீபத்தில் கூகுள் நிறுவனம் சீனாவில் பெரும் சிக்கலை சந்தித்தது. கூகுள் தளத்தை உளவு பார்க்கத் தொடங்கியது சீன அரசு. மேலும், கூகுள் இணையதளத்திற்கு சென்சாரும் விதித்தது. கூகுள் இணையதளத்திற்குள் வைரஸ்களையும் அனுப்பியதால் கடுப்பாகிப் போன கூகுள், தனது அலுவலகங்களை சீனாவிலிருந்து இடம் மாற்றப் போவதாக எச்சரித்திருந்த நிலையில், தற்போது கூகுளை அப்படியே காப்பி அடித்து போலி சர்ச் என்ஜின் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. கூகுள் இணையதளத்தின் லோகோ மற்றும் பக்கங்கள் அப்படியே டிட்டோ வாக கூஜி தளத்தில் உள்ளன.
இதேபோல யூடியூபில் உள்ளதைப் போலவே அப்படியே காப்பி அடித்து, YouTubecn.com இணையதளம் வெளியாகியுள்ளது. ஒரிஜினல் யூடியூபில் உள்ள அத்தனையும் அப்படியே இதிலும் இடம் பெறுகிறது. அதேசமயம், சீனாவில் தடை செய்யப்பட்ட யூடியூப் வீடியோக்கள் இதில் கிடைக்கின்றனவாம்.
யூடியூப் இணையதளம் சீனாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்த இரண்டு இணையதளங்களுமே ஒரே நாளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு இணையதளங்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதுவரை இவற்றை தடை செய்யவோ, முடக்கவோ சீன அரசு நடவடிக்கை எதையும் எடுக்காமல் உள்ளது.
சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இணையதளங்கள் மீது சீனாவின் தேசிய காப்புரிமை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அப்படியே அப்பட்டமாக கூகுள் மற்றும் யூடியூபின் இணையதளங்களை காப்பி அடித்து வெளியாகியுள்ள கூஜி மற்றும் யூடியூப் சிஎன் ஆகியவை குறித்து அது மெளனமாக இருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
ஹிலாரி
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் இந்த போலி இணையதளங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவின் நடவடிக்கை கவலை தருகிறது. இன்டர்நெட் சுதந்திரத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
கூகுள் மீதான சீனாவின் கட்டுப்பாடுகள், நெருக்குதல்கள் குறித்து சீன வெளியுறவு அமைச்சருடன் பேசியுள்ளேன். பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. பிரச்சினை விரைவில் தீரும் என நம்புகிறேன் என்றார்.
0 comments:
Post a Comment