"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


உடல் பாதி போனாலும் உள்ளத்தில் தன்நம்பிக்கையுடன் வாழும் அதிசய மனிதர்!

6.2.10

படத்தில் நீங்கள் பார்ப்பது பாதி அளவு உள்ள மனித பொம்மை அல்ல உயிருள்ள ஒரு மனிதர்.

சீனாவைச் சோ்ந்த பெங் ஷுலினிற்கு 1995- இல் வியட்நாமில் நடந்த சம்பவம் அது.
சாலை ஓரமாக சென்றுக் கொண்டிருந்த பெங் ஷுலின் மீது லாரி மோதிய போது தடுமாறி விழுந்த பெங் ஷுலின் உடலின் மேல் லாரி ஏறியதில் வயிற்றுப் பகுதி கீழே பாதி துண்டாக்கி விட்டது.

ஏகப்பட்ட இரத்தம் வெளியேறிவிட்டது. பெங் ஷுலின் உயிர் பிழைக்கமாட்டார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்திருந்தனர்.

வலியில் துடித்துக் கொண்டிருந்த பெங் ஷுலின் தன் அருகே துண்டாகி கிடந்த கால்களையும், வயிற்கு கீழ் பகுதியையும் பார்க்க முடிந்தது.

அவரால் கணப்பொழுதில் நடந்த சம்பவத்தை புரிந்து கொள்ள முடிந்தது. தன் அருகே தன்னுடைய பாதி சிதைந்த உடல்…
எப்படி இருந்திருந்திருக்கும் பெங் ஷுலினுக்கு?

பிழைக்க மாட்டார் என்ற அவநம்பிக்கையுடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடுமையான போராட்டத்திற்கு பின் டாக்டர்கள் பெங் ஷுலினைக் காப்பாற்றிவிட்டனர்.

தற்போது பெங் ஷீலினின் உயரம் 78 செ.மீ மட்டுமே.
வயிற்றுக்கு கீழே எந்த பகுதிகளும் இல்லை. அந்த பகுதிகளை மூடுவதற்காக பெங் ஷுலின் தோல்களை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டியெடுத்து மூடிவிட்டார்கள். இதற்காக 20- டாக்டர்கள் கொண்ட மருத்துவ குழுவால் பெங்ஷீலினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏகப்பட்ட அறுவை சிகிச்சைகள்.

அடுத்த கட்டமாக படுக்கையிலேயே இருந்த பெங் ஷுலினுக்கு நிற்பதற்கும், நடப்பதற்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நீண்ட காலத்திற்கு பின் ஒரளவு நடக்கும் முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்.

myinterestingfiles76269sante-chine

இந்நிகழ்ச்சி மருத்துவ உலகத்தின் அதிசயம் என்கிறார்கள்..
உடலில் சின்ன பாதிப்பு என்றாலும் அனைவரும் சோர்ந்து பொய் தன்நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

ஆனால் இதற்கு மாற்றமாக பெங் ஷுலினோ தன் உடலின் பெரும்பகுதியை இழந்தும் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்.

“ஒர் நிகழ்ச்சி நடந்து விட்டது. நடக்கக்கூடாத நிகழ்ச்சி ஆனால் நடந்துவிட்டது. என்ன செய்வது?

அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை நம்மிடம் இருக்க வேண்டும். எந்த ஒரு கஷ்ட விளைவுகளையும் சமாளிப்பதற்கு முதல்படி நிகழ்ந்துவிட்டதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான்.
அந்த உணர்வுதான் நம்மை அடுத்தக் கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும். அதாவது தீர்வு காணக்கூடிய கட்டத்திற்கு.

இது மனோதத்துவ நிபுணர்களின் நத்துவம்.
இஸ்லாமும் கஷ்டம் வரும் போது ”உனக்கு கீழ் உள்ளவர்களை பார் உனக்கு மேல் உள்ளவர்களை பார்க்காதே” என்று கூறி கஷ்டம் வரும் போது மனிதக்கு மனோபலத்தை ஏற்படுத்தும் வழி முறைகளை கற்று தருகின்றது.
இதை சரியாக கடைபிடித்துள்ளார் சீனா நாட்டைச் சேர்ந்த பெங் ஷுலின்.

உடல் உறுப்புகளை இழந்து வாழ்கையே போய்வி்ட்டது என்று கூறி நம்பிக்கையை இழப்பவர்களுக்கும், ஒரு சிரிய கஷ்டம் வந்தாலும் சோர்ந்து போகும் மனிதர்களுக்கும் பெங் ஷுலின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!

நமக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்து கவலைப்பட்டு, உள்ளதையும் இழந்து விடால், அடுத்த கட்டம் என்ன என்பதை தன்நம்பிக்கையுடன் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதே இந்த செய்தி நமக்கு உணர்த்தும் பாடம்!




0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP