தமிழகத்திற்கு கடத்தப்படும் வட இந்திய சிறுமிகளுக்கு பாலியல் கொடுமைகள்
6.2.10
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்படும் சிறுமிகளில் பலர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்று பாளையங்கோட்டையில் நடந்த போலீசாருக்கான கருத்தரங்கில் பேசிய பல்கலைகழக பேராசிரியர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
சைல்டு லைன் 1098 குழந்தைகள் உரிமைகள் குறித்த போலீசாருக்கான பயிற்சி கருத்தரங்கம் பாளையில் உள்ள பணியிடை பயிற்சி மையத்தில் நடந்தது. குழந்தைகள் ஆலோசனை மைய இயக்குனர் பிலிப் ஆபிரகாம் வரவேற்றார். பணியிடை பயிற்சி மைய இன்ஸ்பெக்டர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக குற்றவியல் துறை பேராசிரியர் மாதவ சோமசுந்தரம் பேசுகையில்,
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் இந்தியா முழுவதும் 83 நகரங்களில் சைல்டு லைன் திட்டம் செயல்பட்டு வருகிறது.
1098 என்ற இலவச தொலைபேசி மூலம் ரயில், பஸ், விடுதிகளில் சுற்றி திரியும் சிறுவர்கள், ஓட்டல்கள், பூங்காக்கள், குவாரிகள், செங்கல் சூலைகளில் வேலைக்கு அமர்த்தப்படும் 14வயதுக்கு உட்பட்ட ஆயிரக்கனக்கான சிறுவர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
பல குழந்தைகள் திருப்பூர், மும்பை பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு கடுமையான வேலை செய்ய சொல்லி கொடுமைப்படுத்தப்படுகின்றனர்.
வடமாநிலங்களில இருந்து அழைத்து வரப்படும் ஏராளமான சிறுமிகள் பாலியல் கொடு்மைக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
சிலர் பிச்சையெடுக்கவும் அவர்களை பயன்படுத்துகின்றனர். மணிப்பூர், அஸ்ஸாம் போன்ற வடமாநிலங்களில் இருந்து குழந்தைகளை கடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் களியக்கவிளை அருகே அவ்வாறு கடத்தி வரப்பட்ட 76 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தமிழகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் எதற்காக இங்கு கடத்தி வரப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணத்தை காவல் துறையினர் கண்டுபிடித்து நடவடிக்க எடுக்க வேண்டு்ம் என்றார்.
0 comments:
Post a Comment