அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் மதுரையில் சமூக எழுச்சி மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் பேருதவியாலும், உங்களின் துஆ பரக்கத்தாலும், நல்லாதரவாலும்தான் இது சாத்தியமாகியது.
எங்கள் பிரதிநிதிகள் உங்களிடம் வந்திருந்தபொழுது அவர்களை அரவணைத்து, அனைத்து விதமான உதவிகளும் செய்து ஊக்குவித்தீர்கள்.
மதுரை நகரமே எழுச்சி கண்டது. வீரர்களின் வீரமிகு அணிவகுப்பு வியப்பிலாழ்த்தியது. சமுதாயக் காவலர்களான ஆலிம் பெருமக்களின் அணிவகுப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பின் அணிதிரண்ட மக்கள் வெள்ளத்தின் முழக்கங்களோ விண்ணை முட்டின.
பல்லாயிரக்கணக்கானோர் மாநாட்டுத் திடலில் படை திரண்டனர். எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதியது. தலைவர்களின் எழுச்சி மிக்க உரைகள் முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோரின் அவல நிலைகளைப் படம் பிடித்துக் காட்டின.
இந்த மாநாடு வெகு சிறப்பாக நடைபெற பேராதரவு தந்துதவிய உங்களுக்கு மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றியினை உரித்தாக்கிக் கொள்கின்றோம்.
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
இவண்,
விடியல் வெள்ளி வாசகர் வட்டம்
0 comments:
Post a Comment