திருமணம் வேண்டாம் என்று துறவரம் மேற்கொள்ள தடை
3.3.10
இன்றைக்கு நீங்கள் கண்கூடாக பார்க்கலாம் மாற்றுமதத் துறவிகள் திருமணம் செய்துக்கொள்ளாமல் துறவிகளாக வாழந்து வருவார்கள் ஆனால் அவர்களால் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது எனவே பெண் துறவிகளை நியமித்து அவர்களுடன் தவறான உறவுமுறைகளை வளர்த்துக் கொள்வார்கள். இதன் மூலம் என்ன விளங்குகிறது அவர்களின் மதம் போதிக்கும் துறவரம் தவறானது மேலும் அவர்களின் கொள்கையும் தவறானது என்பதுதானே!
'அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)
உங்கள் மன அமைதிக்காகவே திருமணம்
ஒரு ஆணோ பெண்ணோ திருமணமாகாத நிலையிலோ அல்லது திருமணமாகியும் திருமண ஒப்பந்த முறிவு ஏற்பட்ட நிலையிலோ மன நிம்மதியுடன் வாழ முடியுமா? திருமணத்தின் மூலமாகத்தான் மனிதனுக்கு மன அமைதி ஏற்படும் என்பதை உங்களைப் படைத்த ரப்புல் ஆலமீன் கூறுகிறான். மாற்றுமதத்தை விட இஸ்லாம் மிக மிக தெளிவாக திருமணத்தை பற்றி வர்ணிக்கிறது இது இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு அத்தாட்சியல்லவா? இந்த அத்தாட்சியை நாம் இழக்கலாமா?
'நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.' (அல்குர்ஆன் 30:21)
அனைத்து நபிமார்களுக்கும் திருமணம் நடந்தது பிள்ளைகள் பிறந்தன!
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்'. (அல்குர்ஆன் 13:38)
அநாதைகளுக்கும் திருமணம் முடித்துவைக்க வேண்டும்
அநாதைகளை அவர்கள் திருமண வயது அடையும் வரை (அவர்கள் முன்னேற்றம் கருதி) சோதித்துக் கொண்டிருங்கள் - (அவர்கள் மணப் பருவத்தை அடைந்ததும்) அவர்கள் (தங்கள் சொத்தை நிர்வகிக்கும் ஆற்றல்) அறிவை பெற்றுவிட்டதாக நீங்கள் அறிந்தால், அவர்களிடம் அவர்கள் சொத்தை ஒப்படைத்து விடுங்கள்;. அவர்கள் பெரியவர்களாகி (தம் பொருள்களைத் திரும்பப் பெற்று) விடுவார்கள் என்று அவர்கள் சொத்தை அவசர அவசரமாகவும், வீண் விரையமாகவும் சாப்பிடாதீர்கள். இன்னும் (அவ்வநாதைகளின் பொறுப்பேற்றுக் கொண்டவர்) செல்வந்தராக இருந்தால் (அச்சொத்திலிருந்து ஊதியம் பெறுவதைத்) தவிர்த்துக் கொள்ளட்டும் - ஆனால், அவர் ஏழையாக இருந்தால் நியாயமான அளவு சாப்பிட்டுக் கொள்ளவும்;. மேலும் அவர்களுடைய பொருட்களை அவர்களிடம் ஒப்படைக்கும்போது அவர்கள் மீது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - (உண்மையாகக்) கணக்கெடுப்பதில் அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 4-6)
அடிமைகளுக்கும் திருமணம் முடித்து வைக்க வேண்டும்!
'உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 24:32)
நான் கடவுளின் புதல்வன் என்று தன்னை நிலை நிறுத்தி கொண்டு சிலர் இன்று அவர்களின் உல்லாசலீலைகள் வெளிவந்து உள்ளன.இது அல்லாஹ்வின் வாக்கை மேலோங்க செய்கிறது.
0 comments:
Post a Comment