"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


சன் டிவி.யின் வக்கிரமும்.....

4.3.10

சன் டி.வி முன்னர் இரவு 10.30 மணிக்கு மேல் வழங்கிக்கொண்டிருந்த மிட் நைட் மசாலாவை தூக்கி சாப்பிடும் வகையில் இருந்த நித்யானந்தரின் சேட்டைகள் கடந்த மூன்று நாட்களாக சன் நியூஸ் சேனலின் TRB ரேட்டிங்கை தூக்கிப்பிடித்தது.


நித்யானந்தரின் காமக்களியாட்டங்களினால், சாதாரண குடிமகன் எவனும் பாதிக்கப்படவில்லை என்றாலும், அவரை பின்பற்றிய லட்சக்கணக்கான பக்தர்கள் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகிப்போனார்கள்.


சாதாரண குடிமகனின் பிரச்சனைகள் அனைத்தும் மறக்கடிக்கப்பட்டன.


சுவாரஸ்யம் குறையாமல் , முதல் நாள் நித்யானந்தர் பற்றி ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்திய சன் டி.வி. மறுநாள், அந்த நடிகை யார் என கூவி கூவி ஏலம் போட்டது.


தங்களது சீரியல் வருமானம் பாதிக்காத வகையிலும், அதே சீரியல் நேரத்தில் ஸ்க்ரோலிங் செய்தி மூலம் பரபரப்பு ஏற்படுத்தியும், தனக்கு தேவையானதை சாதித்துக்கொண்டது. விளம்பரமே இல்லாத சன் நியூஸ் சேனலில் இப்போதெல்லாம் பட்டையைக்கிளப்புகின்றன விளம்பரங்கள்.


இவர்களின் மற்ற செய்திகள் எல்லாம், ஒரு சில நொடிகள் மட்டுமே வரும் கிளிப்பிங் களாகவே இருக்கும். ஆனால் இந்த செய்தி கிளிப்பிங் மட்டும் 3 நிமிடத்திற்கு குறையவில்லை. வீட்டில் குடும்பத்துடன் உட்கார்ந்து செய்தியைப்பார்க்கவே முடியவில்லை.


சாமியார் தண்டிக்கப்பட வேண்டியவர்தான். பல லட்சம் பேரின் நம்பிக்கையை பாழடித்தவர் அவர். அந்த நடிகையும் தவறு செய்தவராகவே இருந்தாலும், நடிகையின் இமேஜை இந்த அளவுக்கு பாழ்படுத்த வேண்டுமா ? முதல் நாள் முகத்தை மறைத்த சன்.டி.வி. மறுநாள் முகத்தை காட்டியது ஏன் ? பரபரப்பை குறைக்காமல் இருக்கவா ? மன உளைச்சலால் அந்த நடிகை ஏதாவது செய்துகொண்டால் இந்த டி.வி. பொறுப்பேற்குமா ?.


நித்யானந்தரின் அக்கிரமத்தைக்காட்டிலும், சன் டி.வி. யின் வக்கிரம் ... உக்கிரமாய் இருக்கிறது. பொதுமக்களின் மத்தியில் ஒரு நல்ல பெயருடன் இருந்த டி.வி. போட்டியை தாக்குப்பிடிக்க முடியாமல், காப்பியடித்து, "ராணி 6, ராஜா யாரு" என்று ஒரு நிகழ்ச்சியை வழங்கியது. அதை தொடர்ந்து, "ஆடவரெல்லாம் ஆட வரலாம்" என அழைத்தது.


அட.. அதையெல்லாம் கூட விடுங்கள். "சன் குடும்பம் விருதுகள்" என்று குடும்ப சீரியல் கேரக்டர்களுக்கு இடையேயான போட்டியில் தொகுப்பாளினியாக வந்த "கஸ்தூரி".. அடடடடா.. காணக்கண் கோடி வேண்டும்.


சன். டி.வியே. காலம் கடந்து விடவில்லை. மக்கள் மத்தியில் உனக்கென்று ஒரு நல்ல பெயர் இன்னமும் இருக்கிறது. அதை தயவு செய்து காப்பற்றிக்கொள்.


நன்றி:
உலவு

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP