கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி-பாப்புலர் /ப்ரண்டின் மாநில செயற்குழு முடிவு
4.3.10
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்கான மிஸ்ரா கமிஷன் அறிக்கையை அமுல்படுத்த கோரி
கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி-பாப்புலர் /ப்ரண்டின் மாநில செயற்குழு முடிவு
பாப்புலர் /ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று (02-03-2010) சென்னையில் மாநிலத் தலைவர் எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
1. கடந்த பிப்ரவரி 20,21 ஆகிய தேதிகளில் பாப்புலர் /ப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில அளவில் நடத்திய சமூக எழுச்சி மாநாடு வெற்றி பெற பாடுபட்ட, ஒத்துழைப்பு அளித்த ஜமாத்தார்கள், உலமாக்கள், சமூக இயக்கங்கள், பாப்புலர் /ப்ரண்டின் ஆதரவாளர்கள், அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு இயக்கங்கள், ஒருங்கிணைப்பு குழுவினர், பத்திரிக்கையாளர்கள் ஆகிய அனைவருக்கும் பாப்புலர் /ப்ரண்டின் மாநில செயற்குழு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
2. முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையை உடனே அமுல்படுத்த வலியுறுத்தி பாப்புலர் /ப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த இரு மாதங்களாக தேசிய அளவிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. கோரிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் எதிர்வரும் மார்ச் 18 - 2010 அன்று டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி நடைபெற இருக்கும் பேரணியில் தமிழகத்தில் இருந்தும் கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் மார்ச் 25 - 2010 அன்று சென்னையில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி நடத்துவது என்றும் மார்ச் 12 - 2010 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3. ஏப்ரல் முதல் மே 2010 வரை School Chalo (பள்ளி செல்வோம்) திட்டம் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், அனைத்து குழந்தைகளும் பள்ளி செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
4. மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தியதை பாப்புலர் /ப்ரண்ட் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். என்று பாப்புலர் /ப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது. இந்த செயற்குழுவில்,
· A.S.இஸ்மாயில்
· A.காலித் முஹம்மது
· M.நிஜாம் முஹைதீன்
· K.S.M.இப்ராஹிம்
· V.M.S.முஹம்மது முபாரக்
· ஸுல்பிகர் அலி
· முஹம்மது அன்சாரி
· யா முஹைதீன்
· K.K.சேக் முஹம்மது தெஹ்லான் பாகவி
· B.S.ஹமீது
· அபுபக்கர் சித்தீக்
· J.முஹம்மது ரசீன்
· N.முஹம்மது ஷாஜஹான்
· முஹம்மது யூசுப்
ஆகியோர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
0 comments:
Post a Comment