"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


பேராசிரியர் பெரியார் தாசன் இஸ்லாத்தைத் தழுவினார்!!

13.3.10

ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.


இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன்.


திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.


புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.


சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.


தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP