"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


பள்ளிக்கூடத்தில் ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவியை வெளியேற்றிய பள்ளிக்கூட நிர்வாகம்

5.5.10

ஹிஜாப் அணிந்த காரணத்தினால் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றியுள்ளது கிறிஸ்தவ பள்ளிக்கூடம். இதற்கெதிராக எதிர்ப்பு வலுத்து வருகிறது.


ஆலப்புழையில் குருபுரம் என்ற இடத்தில் செயல்படும் பிலீவேர்ஸ்(believers) சர்ச் சி.பி.எஸ். பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் முஸ்லிம் மாணவி டி.என்.நபாலா. இவர் பள்ளிக்கூடத்திற்கு தலையை மறைக்கும் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். இதனால் இவரை பள்ளிக்கூட நிர்வாகம் பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கியுள்ளது.


கெ.பி.யோகன்னான் என்பவர் தலைமையில் செயல்படும் இப்பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி நபாலாவுக்கு ஹிஜாப் அணிந்ததற்காக மாற்று சான்றிதழ்(T.C) கொடுக்கப்பட்டுள்ளது.


மாற்றுச் சான்றிதழில் கூறப்பட்டுள்ள காரணம் இதுவாகும்: 'maftha is not allowed in this school' என்பதாகும். ஒன்பதாம் வகுப்பிலிருந்து வெற்றி பெற்று பத்தாம் வகுப்பிற்கு சென்றுள்ள நபாலாவை தற்பொழுது பள்ளிக்கூடத்தை விட்டு நீக்கினால் அது அவருடைய தொடர் படிப்பை பாதிக்கும் என்றும் இவ்வருடம் மட்டும் படிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரியபொழுதும் பள்ளிக்கூட நிர்வாகம் செவிக் கொடுக்கவில்லை. இதனை நபாலாவின் தந்தை நாஸிர் முஸ்லியார் பத்திரிகையாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.


ஹிஜாப் அணிவது மதக்கடமையானதால் அனுமதிக்க வேண்டும் என்று கோரியபொழுது பள்ளிக்கூட நிர்வாகம் மோசமாக நடந்துக்கொண்டது.


எல்.கே.ஜி முதல் நபாலா இப்பள்ளிக்கூடத்தில்தான் பயின்று வருகிறார். முதலில் எஸ்.என்.டி.பி என்ற அமைப்பின் கீழ் இப்பள்ளிக்கூடம் செயல்பட்டிருந்தது. அப்பொழுதெல்லாம் பிரச்சனைகளொன்றும் இல்லை. பிலீவர்ஸ் சர்ச் இப்பள்ளிக்கூட நிர்வாகத்தை ஏற்ற பொழுதுதான் பிரச்சனை உருவானது. நபாலாவை தொடர்ந்து படிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி அவருடைய தாயார் பள்ளிக்கூடம் சென்றபொழுது ஆசிரியையோ தலைமை ஆசிரியரோ சந்திக்க விருப்பமில்லை எனக் கூறிவிட்டனர்.


தலைமை ஆசிரியரின் மொபைலில் தொடர்புக் கொண்டபொழுது ஹிஜாபை அனுமதிக்க முடியாது டி.சி யை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார். அப்படியானால் ஹிஜாப் அணிந்ததால்தான் டி.சி வழங்குகிறோம் என்று எழுதித் தாருங்கள் என்ற பொழுது இவ்வாறு கேட்டால் மாணவியின் மோசமான நடவடிக்கை என்று எழுதித்தருவோம் என மிரட்டினார்.பின்னர் கெஞ்சிய பின்னரே இவ்வாறு எழுதித் தந்துள்ளார்கள்.


நபாலா சி.பி.எஸ். பாடத்திட்டத்தில் படித்துள்ளதால் வேறு பள்ளிக்கூடங்களில் சேர்ப்பது தொடர் படிப்பிற்கு கடினமாக இருக்கும் ஆதலால் கிரஸண்ட் சி.பி.எஸ். பள்ளிக்கூடத்தில் அனுமதிக் கேட்ட பொழுதும் அவர்களும் இத்தகைய பிரச்சனையை காரணம் காட்டி அவர்களும் சேர்க்க முடியாது எனக் கூறிவிட்டனர்.


இதனால் எனது மகளின் தொடர் படிப்பை இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் இதில் தலையிட வேண்டும் எனவும் நபாலாவின் தந்தை கோரிக்கை விடுத்துள்ளார்.


மாணவியை ஹிஜாப் அணிந்ததற்காக வெளியேற்றிய பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

செய்தி:
தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP