"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


மேல்படிப்பு தொடர பண உதவி வேண்டும் : மாநில ரேங்க் மாணவி வேண்டுகோள்

15.5.10

தூத்துக்குடி : பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் மாநில முதலிடம் பிடித்த காயல்பட்டணம் பள்ளி ஏழை மாணவி பாத்திமுத்து, தனது மேல்படிப்பு தொடர யாராவது பணஉதவி செய்யவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருச்செந்தூர் அடுத்த காயல்பட்டணம் பரிமார் தெருவைச் சேர்ந்தவர் பாத்திமுத்து. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியான இவர், பிளஸ் 2வில் உளவியல் பாடத்தில் 200க்கு 172 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது தந்தை அபுமுகமது, சென்னையில் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் பால் அமீனா, ஆறு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.


பாடவாரியாக இவர் பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் -123, ஆங்கிலம் -92, மனை இயல் -125, உளவியல் -172, எழுத்து மற்றும் செய்முறை தேர்வு - 366. மொத்தம் - 878/1200. பாத்தி முத்து கூறுகையில்,' எனது இந்த சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள் காரணம். நர்சிங் அல்லது ஆசிரியர் பயிற்சி படிக்க விரும்புகிறேன். அதற்கு போதுமான பண வசதியில்லை. யாராவது பண உதவி செய்தால் மேல்படிப்பை தொடர தயாராகவுள்ளேன்'' என்றார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP