ஃப்ரீடம் ஃபுளோடில்லா 2- உடன் இணையவுள்ள லெபனானியக் கப்பல்
27.6.10
லெபனானிய நிவாரணக் கப்பல் பெய்ரூட் – லெபனானைச் சேர்ந்த ‘பலஸ்தீன் மற்றும் அல் அக்ஸா மஸ்ஜித் ஆதரவுக்குழு’ காஸா மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்குமுகமாக அடுத்த மாத இறுதியில் கிரேக்க நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஃப்ரீடம் ஃபுளோடில்லா 2 உடன் இணைந்துகொள்ளுமுகமாக நிவாரணப் பொருட்களடங்கிய ஒரு கப்பலைத் தாமும் அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (25.06.2010) கப்பலுக்கான இணைப்பாளர் ஷெய்க் ஹுஸாம் அல் ஃகாலி இதுபற்றிக் கருத்துரைக்கையில், தாம் அனுப்பவிருக்கும் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலில் லெபனானிய மார்க்க அறிஞர்கள் 15 பேரும் செல்லவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். லெபனான் சார்பில் துயர்துடைப்புக் குழுவில் இடம்பெறுவோர் வான்வழியே கிரேக்கம் சென்று அங்குள்ள துறைமுகத்திலிருந்தே கப்பலைச் சென்றடைவார்கள் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இஸ்ரேலிய அச்சுறுத்தல்கள் துயர்துடைப்புக் குழுவில் பங்கேற்போரை எந்தவகையிலும் பின்வாங்கச் செய்யப்போவதில்லை என்றும், காஸா மீதான முற்றுகையை முறியடிப்பதில் அவர்கள் மிகுந்த உறுதியோடு இருப்பதாகவும் ஷெய்க் ஹுஸாம் அல் ஃகாலி வலியுறுத்தினார்.
0 comments:
Post a Comment