பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம்
24.6.10
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டத்தின் தீர்மானங்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜுன் 18,19 ஆகிய இரு தினங்கள்நடைபெற்றது.மாநில தலைவர் முகமது அலி ஜின்னா அவர்கள் தலைமை தாங்கினார்.மேலும் துனைத்தலைவர் இஸ்மாயில் மற்றும்பொதுச்செயலாளர் அகமது பகுருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. 1) கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வெற்றி பெற வாழ்த்துவதோடு இன,மொழி மற்றும் மத ரீதியாக எந்த பாகுபாடும்பார்க்காமல் அனைத்து சமூக மக்களும் குறிப்பாக முஸ்லிம் சமுகம் திரளாக கலந்து கொண்டு வெற்றியடையச் செய்யுமாறு இச்செயற்குழுகேட்டுக்கொள்கிறது. 2) செம்மொழி மாநாட்டையொட்டி ஆயுள் சிறை கைதிகளில் 7 வருடம் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை கருணையின் அடிப்படையில் விடுதலைசெய்ய வேண்டும்.இதில் எவ்வித பாரபட்சம் பார்க்காமல் முஸ்லிம் சிறைக்கைதிகளையும் விடுவிக்கவேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. 3)63 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மேட்டுப்பாளையத்தில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்துவதென தீர்மானிக்கபட்டது.மேலும்மாவட்டம் முழுவதும் பரவலாக தேசியகொடி ஏற்றி இனிப்பு வழங்கவும் தீர்மானிக்கபட்டது. 4) கடந்த 2006 ஜீலை 22 ஆம் நாள் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்தி அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய்வழக்கு புனைந்து தீவிரவாதிகளாக சித்தரித்தஉளவுத்துறை அதிகாரி ரத்னசபாபதி அவர்களின் நாடகம் வெளிவந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தமிழக அரசின் மீது சிறுபான்மைமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.ஆதலால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ரத்னசபாபதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜுலை மாதம்தலைமைசெயலகத்தை நோக்கி சென்னையில் மாபெரும் பேரணியும் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தஇச்செயற்குழு தீர்மானித்துள்ளது. 5)1984 ல் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்ட போபால் விஷவாயு வழக்கில் 25 ஆண்டுகளுக்கு பிறகு வழங்கபட்ட தீர்ப்பு பொதுமக்களிடையேபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே பாதிக்கபட்ட மற்றும் சாமானிய மக்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையானநிவாரன உதவிகளை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும் இதற்கு காரணமான குற்றவாளி ஆண்டர்சனை இந்தியா கொண்டுவந்துதண்டிக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு மத்திய அரசை கேட்டுக்கொள்கிறது. 6) பள்ளி கல்விக்கட்டணத்திற்காக அமைக்கபட்ட நீதிபதி கோவிந்தராஜன்குழுவின் பரிந்துறையை அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.அதைதாமதிக்கும் பட்சத்தில் தேவையில்லாத மன உளைச்சலுக்கு மாணவர்களும் மற்றும் பெற்றோர்களும் உள்ளாக்கபடுகின்றனர்.எனவே தமிழக அரசுதனியார் பள்;ளிகளின் நிர்பந்தத்திற்கு கட்டுப்படாமல் நீதிபதி கோவிந்தராஜன்குழுவின் பரிந்துறையை உடனே அமுல்படுத்த இச்செயற்குழுகேட்டுக்கொள்கிறது. 7) தொடர்ந்து மனிதாபிமானத்திற்கு எதிரான அத்துமீறலான செயல்களை செய்துவருவதோடு சமீபத்தில் இந்தியாவையும் பிசாசுகளின் நாடுகள் எனபேசியதாலும் இஸ்ரேலுடனான ராஜியஉறவை மத்திய அரசு துண்டித்து கொள்ள வேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
0 comments:
Post a Comment