ஜூலை -22 சம்பவம் : தமிழகம் முழுவதும் முஸ்லீம் அமைப்பு ஆர்ப்பாட்டம்
22.7.10
பாப்புலர் ப்ரன்ட் ஃஆப் இண்டியா என்ற முஸ்லீம் அமைப்பு தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 22ல் ஐ.எஸ்.ஏ.சி. ரத்தினசபாபதி, கோவையில் வெடுகுண்டு வைத்தவர்கள் என்று 5 முஸ்லீம்களை கைது செய்தார்.
இது அப்போது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பொய்புகார் என்று நக்கீரன் வார இதழும் செய்தி வெளியிட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் இது பொய் வழக்கு என்று தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கு தீர்ப்பு முடிந்து 4 வருடங்களாயிற்று. தற்போது ரத்தினசபாபதி, கோவையில் மதுவிலக்கு பிரிவில் கூடுதல் துணை ஆணையாளராக பதவி வகிக்கிறார்.
பொய்வழக்கு போட்ட ரத்தினசபாபதி உயர்பதவியில் இருக்கிறார். அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோரி பொய் வழக்கு போடப்பட்ட (ஜூலை 22ல்) இதே நாளில் இன்று முஸ்லீம் அமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
நன்றி :நக்கீரன்
0 comments:
Post a Comment