பலஸ்தீனர்களுக்கு எதிரான யுத்தத்தை இலங்கை ஆதரிக்கிறது என்று கூறியதாக வெளியான செய்தி தவறானது: இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர்
26.7.10
பலஸ்தீனர்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான இஸ்ரேலின் யுத்தத்திற்கு இலங்கை தீவிர ஆதரவளிக்கிறது என தான் கூறியதாக இஸ்ரேலிய பத்திரிகையொன்றில் வெளியான செய்தி தவறானது என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் டொனால்ட் பெரேரா கூறியுள்ளார். "எவ்வாறெனினும், பலஸ்தீனர்களின் அபிலாஷைகளுக்கும் மத்திய கிழக்கில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளைக் கொண்ட இஸ்ரேலும் பலஸ்தீனமும் பரஸ்பர சகிப்புத் தன்மையுடன் இருக்கக்கூடிய, இரு நாடுகள் தீர்வொன்றே காணப்பட வேண்டும் என்பதே அணிசேரா நாடுகளின் நிலைப்பாட்டை பின்பற்றும் நாடான இலங்கையின் உத்தியோகபூர்வ நிலைப்பாடாடாகவுள்ளது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த இஸ்ரேலிய பத்திரிகைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இஸ்ரேலுடனான நட்பை இலங்கை எப்போதும் மதிப்பதாக கூறியுள்ளார்.
பலஸ்தீனப் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு இலங்கை ஆதரவளிப்பதாக டொனால் பெரேரா கூறியதாக செய்தி வெளியானதையடுத்து பலஸ்தீன- இலங்கை நட்புறவுச் சமூகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment