துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கொலை செய்ய ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதி!
21.7.10
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி தொண்டர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாக புலனாய்வு செய்து ஆதாரங்களுடன் ஹெட்லைன்ஸ் டுடே என்ற செய்தி சேனல் செய்தி வெளியிட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் அச்செய்தி நிருவனத்தின் அலுவலகத்தை அடித்து நொருக்கினர். இது ஆர்.எஸ்.எஸ் இயக்க தலைவர்களின் நேரடி உத்தரவின் பேரில் நடந்த தாக்குதலாகும் இதை ஏற்கனவே இந்நேரம் பிரசுரித்திருந்தது.
இச்சூழ்லில் அக்காட்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியை கொலை செய்ய பி.ஜே.பி தலைவர் பி.எல்.ஷர்மா திட்டமிட்டிருப்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் இக்கோரிக்கையை ஆதரித்ததோடு இது இப்போதே கிள்ளியெறியப்படாவிட்டால் இவர்கள் தங்கள் செல்வாக்கின் மூலம் ஒட்டு மொத்த சமூகத்தையும் அரசியல் அமைப்பையும் அரசியல் சாசனத்தையும் சிதைத்து விடுவார்கள் என்றார்.
மேலும் மும்பை கலவரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே முதலில் இத்தொடர்புகளை கண்டுபிடித்த போது அவரின் தேசப்பற்றை கேள்விகுறியாக்கியது ஆர்.எஸ்.எஸ் என்பதையும் நினைவுபடுத்தினார்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment