சொராபுதீன் என்கவுன்டர் விவகாரம் குஜராத் அமைச்சருக்கு சிபிஐ சம்மன்
22.7.10
சொராபுதீன் என்கவுன்டர் விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சர் அமித் ஷாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த சொராபுதீன் ஷேக், தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு சாட்சியாக இருந்த அவரது மனைவியும் கொல்லப்பட்டார். இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி போலீஸ் உயர் அதிகாரிகள் பலரை கைது செய்துள்ளது.
அகமதாபாத் கிரானைட் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததால் மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவின் பேரில் சொராபுதீனை போலீசார் சுட்டுக் கொன்றதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து கடந்த சில நாட்களாக அமித்ஷாவை சிபிஐ தேடிவந்தது. அவர் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், சொராபுதீன் என்கவுன்டர் தொடர்பான விசாரணைக்கு நேரில் வருமாறு அமித்ஷாவுக்கு சிபிஐ இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

0 comments:
Post a Comment