"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


'கேரளா முதல்வர் தனது குற்றச்சாட்டை திரும்பப் பெற்று மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்': பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

2.8.10

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற் ரஹ்மான்,பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரிப் மற்றும் செயற்குழு உறுப்பினர் கோயா ஆகியோர் டெல்லியில் நடைபெற்ற பத்திக்கையாளர் சந்திப்பின் போது, கேரள முதல் மந்திரி அச்சுதானந்தன் முஸ்லிம்களை பற்றி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.



"பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவினர் பணத்தின் மூலமும் காதல் திருமணங்களின் மூலமும் 20 வருடங்களில் கேரளாவை முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று கூறிய கேரள முதல்வர் அச்சுதானந்தன் தனது தவறான குற்றச்சாட்டுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்.


முதலமைச்சரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு மாநிலத்தில் மத துவேசத்தை உண்டாக்கும்" என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற் ரஹ்மான் கூறினார்.


பொதுச் செயலாளர் கே.எம்.ஷெரீப் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் கோயா ஆகியோர் "PFI க்கு எதிரான இந்த குற்றச்சாட்டை முதலமைச்சரால் நிரூபிக்க முடியுமா" என்று சவாலாக கூறினர்.


"முதலமைச்சர் PFI க்கு எதிரான தனது குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும் மேலும் கேரள மக்களுக்கு முன்னால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்" என பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்தனர்.


"முதலமைச்சரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு பாசிச சங்க் பரிவார கும்பல்கள் பரப்பி வரும் தவறான ஒரு கூற்றை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவர் அப்படியே எடுத்துக் கூறுவது எதிர் பாராத ஒன்று.


நாட்டில் லவ் ஜிஹாத் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அதன் மூலம் பெண்கள், இளைஞர்கள் முஸ்லிம்களாக மாற்றப்படுகிறார்கள் எனக் கூறி வருகிறார்.


மேலும் கேரள உயர்நீதிமன்றம் லவ் ஜிஹாத் என்பது ஒரு பொய்யான வதந்தி லவ் ஜிஹாத் என்று எதும் இல்லை என முன்னரே கூறிவிட்டது. இருப்பினும் முதலமைச்சரின் இத்தகைய பேச்சு நீதித்துறையையே நிராகரிப்பதாக உள்ளது.


ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளவர் ஒரு சில அரசியல் ஆதாயங்களுக்காக எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றக் கூடாது.


மேலும் பணம்,கட்டாய மத மாற்றம், மற்றும் லவ் ஜிஹாத் மூலம் மதம் மாற்றுகிறார்கள் எனக் குற்றம் சாட்டுவது ஒரு சமுதாயத்தவரின் இளைஞர்களை அவமானப்படுத்தி அவர்களின் மனதைப் புண்படுத்தும் செயலாகும்." என்றனர்.


மேலும் அவர்கள் கூறுகையில் "அச்சுதானந்தன் ஒரு மூத்த கம்யூனிஸ்ட் தலைவர். அவர் மக்கள் இஸ்லாமிய மதத்தின் பக்கம் ஆர்வமாக வருவதைப் பற்றி அவர் ஏன் கவலைப்படுகிறார் என விளக்கம் அளிக்க வேண்டும்.


மேலும் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மாநிலத்தின் பெரும்பான்மையனவராகவோ அல்லது சிறும்பான்மையினராகவோ இருப்பதை பற்றி அவர் ஏன் கவலைப்படுகிறார் என்பதையும் விளக்க வேண்டும்.


மேலும் நாட்டின் சட்ட வரம்புகள் எதுவும் PFI ன் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்கு வரையறை கூறவில்லை. இத்தகைய பாய்ச்சல்களால் அச்சுதானந்தன் நாட்டின் ஜனநாயக வரையறைக்கு உட்பட்டு செயல்லாற்ற தகுதியற்றவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.


PFI ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை முதலமைச்சரால் நிரூபிக்க முடியுமா. இது போன்ற மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்(CPM) நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானதாக உள்ளது.


கேரள மாநிலத்தின் தலைமை இதைப் போல் முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிரான விசம பிரச்சாரத்தைச் செய்து தான் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற இவ்வாறு கூறியுள்ளது." என்றனர்


"பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா ஜனநாயகத்திற்கு எதிரானது அல்ல. அது பின்தங்கிய முஸ்லிம் சமுதாயத்தையும் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களையும் தேசிய மைய நீரோட்டத்தின் வளர்ச்சியில் எடுத்துச் செல்ல சேவை செய்யும் ஒரு அமைப்பாகும். இது 18 வருடங்களாக இந்தியாவில் பணிகள் செய்து வருகிறது மேலும் நாடு முழுவதும் இதன் தொண்டர்கள் செயல்படுகிறார்கள்." என்றும் கூறினர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP