"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநருக்கு நடைபெற்ற பாராட்டு மற்றும் இப்தார் நிகழ்ச்சி

31.8.10

ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு சென்னை அபு பேலஸில் ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநர் ஜனாப் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் இயக்கங்கள் அறக்கட்டளைகள் கல்வி நிறுவனங்கள் சார்பாக SEED சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது .


இந்நிகழ்ச்சியில் ஜனாப் எம் யூசுப் இக்பால் அவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்கள் . வக்ப் வாரிய தலைவர் ஜனாப் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமையுரையாற்றினார்கள் மேனேஜிங் டிரஸ்டி ஜனாப் எம் ஹிதயதுல்லா அவர்கள் வரவேற்புரை யாற்றினார்கள் .


இந்நிகழ்ச்சியில் பாப்புலர் பிரன்ட் மாநில தலைவர் மு . முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கலந்து கொண்டு ஜார்கண்ட் மாநில மேதகு ஆளுநர் ஜனாப் எம் ஒ ஹெச் பாருக் அவர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜனாப் எம் யூசுப் இக்பால் அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள் .
 Chief Justice of Madras High court M.Yusuf Eqbal Felicitated by Popular front TN State president Mohamed Ali Jinna at an Iftar program held at Chennai

Chief Justice of Madras High court MYusuf Eqbal Felicitated by Popular front TN State president Mohamed Ali Jinna


0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP