மன்னார்குடி- பட்டுக்கோட்டை வழித்தடத்தில் விரைவில் புதிய அகல ரயில் பாதை
2.9.10

புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் குறித்து, திருச்சி கோட்ட ரயில்வே துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் மத்திய ரயில்வே நிலைக் குழுத் தலைவர் டி.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்கு புதிய வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய ரயில்வே நிலைக்குழுத்தலைவர் டி.ஆர். பாலு எம்.பி. தெரிவித்தார்.
மன்னார்குடியில் புதன்கிழமை திருச்சி கோட்ட ரயில்வே அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தியப் பிறகு டி.ஆர். பாலு அளித்த பேட்டி:
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மக்களவையில் மத்திய ரயில்வே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது நீடாமங்கலம், மன்னார்குடி வழித்தடத்தில் 13.6 கி.மீ. தொலைவுக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
இந்தப் பணிகள் வரும் டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரயில் ஓட்டம் தொடங்க உள்ளது.
இப்போது இரண்டாம் கட்டமாக, மன்னார்குடியிலிருந்து பரவாக்கோட்டை, மதுக்கூர் வழியாக பட்டுக்கோட்டை வரை புதிய வழித்தடத்தில் அகல ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த வழித்தடத்தில் புதிய அகல ரயில் பாதை அமைய சுமார் 41 கி.மீ. தொலைவுக்கு | 215.59 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஓரிரு மாதங்களில் தொடங்கப்பட்டு, 2 ஆண்டுகளில் ரயில் சேவையை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
0 comments:
Post a Comment