"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


சங்க பரிவாரத்தின் வகுப்புவாத சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்

17.9.10

பாப்புலர் பிரண்டின் இரண்டு நாள் செயற்குழுக்கூட்டம் கேரளா மாநிலம் மஞ்சேரியில் உள்ள கிரீன் வேலியில் நடைபெற்றது.


பாபர் மஸ்ஜிதின் தீர்ப்பை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் சங்க பரிவாரத்தினர் கோயில் கட்டக்கோரி நாடுமுழுவதும் பிரச்சாரம் செய்து வருவதை நீதித்துறையை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று பாப்புலர் பிரண்ட் குறிப்பிட்டுள்ளது.


முஸ்லிம்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் என்றும் இந்தியா மதசார்பற்ற ஜனநாயக கொள்கைகளை உறுதியாக பற்றிப்பிடிக்கும் நாடு என்பது பாபர் மஸ்ஜிதின் தீர்ப்பிலிருந்து தெரியவரும் என்றும் பாப்புலர் பிரண்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு வழிவகுத்த சூழல் இன்னொருமுறை ஏற்படக்கூடாது என்றும் சட்டத்தை மதிக்காமல் நீதிமன்ற உத்தரவுகளை அவமதித்து நாட்டிற்கு எதிராக இன்னொருமுறை போர் தொடுக்க துடிக்கும் வகுப்புவாத கும்பல்களை அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.


சங்க பரிவாரத்தினரும் ஊடகத்தின் ஒரு சிலரும் தீவிர வாதத்துடன் இஸ்லாத்தை தாராளமாக பயன்படுத்தும்போது ஆர். எஸ். எஸ்- பா. ஜ. க, சிவசேன வகை தீவிரவாதத்தை காவி தீவிர வாதம் என்று உள்துறை அமைச்சர் குறிப்பிட்டது தொடர்பாக எழுந்த கூக்குரல்கள் தேவையற்றது என்று பாப்புலர் பிரண்ட் கருதுகிறது. மேலும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கடமை உணர்வையும் உறுதியான நிலைப்பாட்டையும் பாராட்டுகிறது.


இந்து தீவிரவாதம் என்ற சொல்லாடல் தவறானது என்றும் பெரும்பான்மையாக வாழும் இந்து சகோதர சகோதரிகளின் மத நம்பிக்கைக்கும் சங்க பரிவார் கொள்கைகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது.


சங்க பரிவார் அல்லது ஆர். எஸ். எஸ்- பா. ஜ. க, சிவசேன வகை தீவிரவாதத்தை (RSS-BJP-Sivasena brand terrorism) அம்பலப்படுத்துவதில் சம்பத்தப்பட்டவர்கள் அனைவரும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.


இச்செயற்குழுக்கூட்டதிற்கு பாபுலர் பிரண்ட் சேர்மன் இ எம் அப்துர் ரஹ்மான் அவர்கள் தலைமை தங்கினார். மேலும் பொதுச்செயலாளர் கே எம் ஷெரிப் , துணை தலைவர் முஹம்மத் அலி ஜின்னா , பொருளாளர் ரியாஸ் பாஷா , செயலாளர் ஒ எம் ஏ சலம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP