"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை : சுன்னி வக்ப் போர்டு

30.9.10

அலகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக சுன்னி வக்ப் போர்டு வழக்கறிஞர் சபார்யாப் ஜிலானி தெரிவித்துள்ளார்


பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்று பிரிவினர்களுக்கு பிரித்து அளிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ சிறப்பு பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.


இன்று மதியம் 4.30 மணியளவில் நீதிபதிகளான எஸ்.யு.கான், சுதீர் அகர்வால், தரம்வீர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தேசமே உற்றுநோக்கியிருந்த பரபரப்பான தீர்ப்பை வழங்கியது.


மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடம் ஹிந்து மகாசபைக்கும், அருகிலிலுள்ள இடம் முஸ்லிம்களுக்கும், மீதமுள்ள நிலத்தை நிம்ரோஹி அகாராவுக்கும் வழங்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


இந்த வழக்கின் முக்கிய மனுதாரரான சுன்னி வக்ப் போர்டு தீர்ப்பில் திருப்தியடையவில்லை என்றும் உச்சநீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளது .
தீர்ப்பில் சர்ச்சைக்குரிய பகுதி ராமர் பிறந்த இடம் என்றும் மஸ்ஜிதின் மையப்பகுதியில் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தை இந்து அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது .


மொகாலாய மன்னர் பாபரின் கவர்னர் ஜெனரலான மீர்பாஹிதான் 1528 இல் பாப்ரி மஸ்ஜிதை கட்டினார். ஆனால், 325 வருடங்களுக்கு பிறகு 1853 ஆம் ஆண்டில் ராமர்கோயிலை இடித்துவிட்டு பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டதாக நிம்ரோஹி என்ற ஹிந்துப் பிரிவு பாப்ரி மஸ்ஜித் தங்களுக்கே சொந்தம் எனக்கூறி முதன் முதலாக களமிறங்கியது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP