"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


பாபரி மஸ்ஜித் நில வழக்கு தீர்ப்பு பற்றி பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் அறிக்கை

1.10.10


அலகாபாத் உயர் நீதி மன்றம் பாபரி மஸ்ஜித் நில வழக்கு சம்பந்தமாக வெளியிட்டுள்ள தீர்ப்பின் முழு விபரம் இன்னும் வெளியிடப்பட வில்லை. இருப்பினும் மூன்று நீதிபதிகளும் வழக்கின் முக்கிய பல விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எனினும் தீர்ப்பின் மைய கருத்து சர்ச்சைக்குரிய நிலத்தின் இரண்டு பகுதிகளை ஹிந்துக்களுக்கும் ஒரு பகுதியை முஸ்லிம்களுக்கும் பிரித்து அளிக்குமாறு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது சிலைகள் வைக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசலின் மைய பகுதியை ஹிந்துகளுக்கு கொடுக்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


இந்த தீர்ப்பு வழக்கில் சமர்பிக்கப்பட்ட உண்மை மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் இல்லாமல் வெறுமனே மத நம்பிக்கையின் அடிப்படையிலே வழங்கப்பட்டுள்ளது நமக்குவேதனையளிக்கிறது.


எந்த கட்சியினரும் நிலத்தை பிரித்து வழங்கும்படி கோரவில்லை. இவ்வழக்கில் அகழ்வாரய்ச்சியின் கண்டுபிடிப்பிற்கு மிக அதிகமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இத்தகையதொரு நடைமுறையை வரும் காலங்களில் வரும் வழக்குகளிலும் பின்பற்றப்படுமானால் நாட்டின் பல மத மற்றும் பண்டைய கால கட்டடங்களுக்கு பெரும் சவாலாகவே அமையும்.


வழக்கில் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் உயர்நீதி மன்ற தீர்ப்பு தான் இறுதியானது என்று குறிப்பிடவில்லை. உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்ய அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு உள்ளது. உ.பி. சுன்னத் வக்பு போர்டு உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்திய முஸ்லிம்கள் பாபரி மஸ்ஜிதை சட்டரீதியாகவும் ஜனநாயாக முறையிலும் மீட்டு எடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். இந்நிலையில் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பொது அமைதியினையும் மத நல்லிணக்கத்தையும் பேணி பாதுகாக்குமாறு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP