"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாகமாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)


யாரு வீட்ட வேணாலும் , யாரும் இடிக்கலாம்…

2.10.10

நாட்டாம நீதிபதி : ஏன் பா அவன் வீட்ட இடிச்ச ?


குற்றவாளி : நாட்டாம அய்யா ! நாட்டாம அய்யா ! இவன் வீடு கட்டுறதுக்கு முன்னாடி இங்கதான் எங்க தாத்தா ஓட தாத்தா பொறந்தாரு .. மொரப்படி தாத்தா சொத்து பேரனுக்கு தான் சொந்தம் அது தான் இடிச்சேன்.. நீங்க வென அஸ்திவாரத்த நொண்டி பாருங்க !! இதுக்கு முன்னாடி தாத்தா வீடு இருந்தது தெரியும்.
இதுக்கு சாட்சி இதோ இவருதான்.

நாட்டாம நீதிபதி : இவரு யாருப்பா!


நாட்டாம நீதிபதி : இவரும் ஒரு வகைல பேரன் தான் எங்க தாத்தா ஓட தாத்தாக்கு .இவரு இந்த வீட இடிச்சதுக்கு உதவி செய்தாரு.

நாட்டாம நீதிபதி : (வீட்டின் உரிமையாளரிடம் )இது உன்னுடைய ஊடு என்பதற்கு என்ன ஆதாரம் பா ?


கேஸ் போட்டவர் : இங்க தானுங்க எங்க பரம்பரையே வளந்தது... பல வருசமா இங்க தானுங்க இருக்கோம். பதிவு செய்த வீட்டு பத்திரம் இருக்கு அய்யா !

நாட்டாம நீதிபதி : அப்டியா ! இப்ப உன்னுடைய வீடு , முன்னாடி அவன் தாத்தா வீடு .. அதனால பிரச்சன வென .. இந்த வீட்ட நீ பாதி, அவன் பாதி, அவன் கூட கூட்டி வந்த அவனுக்கு ஒரு பாதி எடுத்துக்குங்க.
இப்ப யாருக்கும் பிரச்சன இல்லைல... எப்படி நாட்டாம தீர்ப்பு ?!!!

2 comments:

அருள் October 3, 2010 at 3:15 AM  

அயோத்தி: நடந்தது இதுதான்!

இங்கே காண்க:

http://arulgreen.blogspot.com/

THE UFO October 3, 2010 at 4:42 AM  

கதையில ஒரு சில பாய்ன்ட்ஸ் மிஸ்ஸிங் காக்கா...

வீட்டை இடிக்கிறதுக்கு முன்னாடி...

குற்றவாளி தன் தாத்தாவோட தாத்தாபோட்ட கோவணத்துண்டையும் தன் தாத்தாவோட பாட்டி போட்ட பாவாடையையும் நடுராத்திரியில கதவைபேத்து நடுக்கூடத்தில வச்சு... அதனால வந்த பிரச்சினக்கப்புறம்தானே வீட்ட இழுத்து பூட்டி ஹவுஸ் ஓனரை வெளியே தொரத்தினார் நாட்டாமை...? தட் இஸ் மிஸ்ஸிங்...!

அப்புறம் கோவனத்துக்கும் பாவடைக்கும் பூஜை பன்றத்துக்கு குற்றவாளிய மட்டும் ஸ்பெஷலா கதவை தொறந்து அனுமதிச்சாரே... அதையும் சொல்ல மறந்துட்டீக...!

மத்தபடி கட்டபஞ்சாயத்து கதை ஓகே...

Post a Comment

Related Posts with Thumbnails

  © Blogger template On The Road by Ourblogtemplates.com 2009

Back to TOP